வியாழன், செப்டம்பர் 28, 2017

குறள் எண்: 0788 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0788}

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் ஆடை உடலிலிருந்து நழுவும்போது, கை தன்னிச்சையாய் செயல்படும்! அதுபோல், துன்பம் நேரும்போது; உடனடியாய் களைய முற்படுவைதே நட்பாகும்!
(அது போல்...)
ஒருவரின் கண் ஆபத்தை அணுகும்போது, இமை அனிச்சையாய் செயல்படும்! அதுபோல், ஊக்கம் குறையும்போது; தாமதமின்றி உற்சாகம் அளிப்போரே பெற்றோராவர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக