சனி, செப்டம்பர் 30, 2017

குறள் எண்: 0790 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0790}

இனையர் இவர்நமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

விழியப்பன் விளக்கம்: "இவர் எமக்கு இத்தகையவர்! யாம் இவருக்கு இத்தகையவர்!" - என மிகையாகப் புனைந்து பேசினாலும், நட்பின் தரம் கெடும்!
(அது போல்...)
"தலைவர் எமக்கு உயிராவார்! யாம் தலைவருக்கு உயிராவோம்!" - என பொய்யாக பிரச்சாரம் செய்தாலும், பொதுவாழ்வின் இயல்பு அழியும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக