ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

குறள் எண்: 0763 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0763}

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

விழியப்பன் விளக்கம்: அலைகடலாய் திரண்டு ஆர்ப்பரித்தாலும், எலி போன்ற பகைவர்கள்; என்ன அழிவை செய்வர்? நாகப்பாம்பு போன்ற சிறுபடையின், கோபப் பெருமூச்சில் அழிந்துவிடுவர்!
(அது போல்...)
சூறாவளியாய் சுழன்று வீசினாலும், பஞ்சு போன்ற தீப்பழக்கங்கள்; என்ன விளைவை உண்டாக்கும்? நெருப்பு போன்ற பெற்ரோரின், அன்புச் சுடரில் பொசுங்கிவிடும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக