செவ்வாய், செப்டம்பர் 05, 2017

குறள் எண்: 0765 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0765}

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை

விழியப்பன் விளக்கம்: எமனே, கோபமாய் போர் தொடுத்தாலும்; புறமுதுகை காட்டாமல், ஒன்றுகூடி எதிர்த்து நிற்கும் வலிமை உடையதே படையாகும்.
(அது போல்...)
சுனாமியே, பேரழிவாய் எதிரே வந்தாலும்; தம்முயிரை மதிக்காமல், ஒருசேர பிள்ளைகளைக் காக்கும் சிந்தனை உடையவரே பெற்றோராவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக