ஞாயிறு, ஜனவரி 14, 2018

குறள் எண்: 0896 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0896}

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

விழியப்பன் விளக்கம்: காட்டுத்தீ போன்ற நெருப்பால் சுடப்பட்டாலும், பிழைப்பதற்கு வழியுண்டாம்! ஆனால், பெரியோரைப் பிழையாகச் சித்தரித்து வாழ்வோர்; பிழைக்கவே மாட்டார்!
(அது போல்...)
உயிர்க்கொல்லி போன்ற போதைக்கு ஆட்பட்டவரும், திருந்துவதற்கு வாய்ப்புண்டாம்! ஆனால், மக்களை ஏய்த்து ஊழலாடிப் பழகியோர்; திருந்தவே மாட்டார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக