வெள்ளி, மே 27, 2016

மன்னித்தருளவும் (குறள் எண் 0111 முதல் குறள் எண் 0297 வரை)



       நம் பெருந்தகையின் பொதுமறைக்கு விளக்கவுரை எழுதும்போது - "(அதுபோல்...)" என்று சொல்லி ஓர் நிகர் விளக்கத்தையும் எழுதுவது வழக்கம். அது, என்னப்பனால் எனக்கு பரிமாறப்பட்ட ஒன்று என்பதை இப்பிரிவின் முன்னுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே, ஒவ்வொரு குறளுக்கும் விளக்கவுரை எழுதிவிட்டு "(அதுபோல்...)" என்று சொல்லி ஓர் நிகர்விளக்கத்தையும் எழுதி வருகிறேன். என் விளக்கவுரைப் படிக்கும் உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். ஆனால்...
  • திடீரென்று நேற்றைய குறளுக்கு விளக்கவுரையைப் பதியும் முன்னர் ""(அதுபோல்...)" என்பது - என்னையும் அறியாமல் "(அல்லது)" என்று மாறி இருந்ததை அறிந்தேன். எனக்கு பெருத்த ஆச்சர்யம்! மிகுந்த மனவேதனையும்!! பெருந்தகையின் குறளின் பொருளுக்கு "நிகராய் ஓர் விளக்கம்" கொடுப்பது கூட "ஓரளவில் ஏற்புடையதே"! ஆனால், அவர் சொன்ன பொருளுக்கு "(அல்லது)" என்று கூறி வேறொன்றை சொல்ல எனக்கென தகுதி இருக்கிறது?
  • உடனே, இந்த தவறு எப்போது நேர்ந்தது என்று ஒவ்வொன்றாய் பின்னோக்கி சென்று தேட ஆரம்பித்தேன். அப்போது, குறள் எண் 0111-இல் அது "(அதுபோல்)" என்று மாறி இருந்ததைக் கண்டேன். மூன்று புள்ளிகள் (...) விடுபட்டதைக் கூட என்னால் பொறுக்க முடியவில்லை. பின்னர் "(அல்லது)" என்ற அந்த பெருந்தவறு குறள் எண் 0135 - இல் நேர்ந்ததைக் கண்டறிந்தேன்.
  • உடனடியாய், அந்த தவறை எல்லாப் பதிவுகளிலும் திருத்திய பின்னரே - நேற்றைய குறளின் விளக்கவுரையைப் பதிந்தேன். இன்று, இப்படி ஓர் பதிவாய் எழுதி - உங்கள் அனைவரிடமும்...
மனப்பூர்வமாய் மன்னிப்பு கோருகிறேன்! என்னை மன்னித்தருள்வீர்!!


குறிப்பு: இந்தப் பிரிவின் முன்னுரையில் சொன்னது போல், உங்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியம். இம்மாதிரியான தவறுகளை நீங்கள் நிச்சயம் சுட்டிக்காட்ட வேண்டும் - அது உங்களின் கடமையும் கூட. வழக்கமாய், இம்மாதிரியான தவறுகளை உடனே "தவறாமல் கண்டறிந்து" குறிப்பிடும் என் நட்புகள் - கதிர்வேல்/ பாரத்/ ஜனார்தனன் - கூட இதைக் கவனிக்கத் தவறியது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக