புதன், மே 25, 2016

குறள் எண்: 0297 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0297}

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

விழியப்பன் விளக்கம்: பொய் சொல்லாத நிலைப்பாட்டைப், பொய்க்காமல் செய்தால்; அறம் தவிர்த்த செய்யக்கூடாதவற்றை, செய்யாதிருக்கத் தவறினாலும்  நன்மையே.
(அது போல்...)
மனிதம் மறக்காத அடிப்படையை, அழியாமல் பாதுகாத்தால்; தேவை இல்லாத இனவாதங்களை, செய்யாதிருக்க மறந்தாலும் சிறந்ததே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக