செவ்வாய், ஜூன் 20, 2017

குறள் எண்: 0688 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0688}

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழிஉரைப்பான் பண்பு

விழியப்பன் விளக்கம்: செயலில் ஒழுக்கம்/பணியிட்டவருக்கு துணை நிற்பது/துணிவுடன் இருப்பது - இம்மூன்றிலும்; வாய்மையின் வழியே பயணிப்பது, தூது உரைப்போரின் பண்பாகும்.
(அது போல்...)
உறவில் ஒழுக்கம்/இல்லத்துணைக்கு உரிமை பகிர்வது/ஆதரவாய் இருப்பது - இம்மூன்றிலும்; அறத்தின் வழியே தொடர்வது, இல்லறத்தில் இணைவோரின் அடிப்படையாகும்.

திங்கள், ஜூன் 19, 2017

குறள் எண்: 0687 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0687}

கடன்அறிந்து காலங் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை

விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட கடமையை அறிந்து, காலத்தை மனதில் கொண்டு; சூழலை ஆராய்ந்து, அனைத்தையும் கணக்கிட்டு உரைக்கும் தூதரே உயர்ந்தவர் ஆவர்.
(அது போல்...)
கொடுக்கப்பட்ட பிறவியை உணர்ந்து, இருக்கும் ஆயுளைக் கொண்டு; சூழ்ந்தோரை ஆராய்ந்து, அனைவரையும் அரவணைத்து வாழ்வதே சிறந்த பிறவிக்கடன் ஆகும்.

ஞாயிறு, ஜூன் 18, 2017

குறள் எண்: 0686 (விழியப்பன் விளக்கவுரை)


{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0686}


கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது

விழியப்பன் விளக்கம்: அறநூல்களைக் கற்று, பகைவரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல்; மனம் மகிழும் வண்ணம் சொல்லி, காலத்திற்கு ஏற்றதை அறிந்திருப்பதே தூது ஆகும்.
(அது போல்...)
நல்லவர்களை அறிந்து, இனவாதிகளின் வளர்ச்சிக்கு வித்திடாமல்; மனசாட்சி சொல்லும் வண்ணம் பயணித்து, சமூகத்திற்கு உகந்ததை ஆதரிப்பதே தேசபக்தி ஆகும்.

சனி, ஜூன் 17, 2017

குறள் எண்: 0685 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0685}

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது

விழியப்பன் விளக்கம்: தேவையானதைத் தொகுத்துச் சொல்லி, தேவையற்றதைத் தவிர்த்து; மனம் மகிழும் வண்ணம் சொல்லி, நன்மைகளை பெற்றுத் தருவதே தூது ஆகும்.
(அது போல்...)
உயர்வானதை ஊரறியச் சொல்லி, உயர்வற்றதை மறைத்து; சுற்றம் பெருமை கொள்ளும் வண்ணம், உறவுகளைப் பேணுவதே இல்லறம் ஆகும்.

வெள்ளி, ஜூன் 16, 2017

குறள் எண்: 0684 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0684}

அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு

விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறம்/அமைதியான தோற்றம்/தெளிந்த கல்வி - இம்மூன்றிலும்; தேர்ந்த வல்லமை உடையோர், தூதுரைக்கும் பணிக்கு செல்லவேண்டும்.
(அது போல்...)
உரிமையளிக்கும் குணம்/இயல்பான உணர்வு/பரஸ்பர புரிதல் - இம்மூன்றிலும்; ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோர், இல்லற வாழ்வில் இணையவேண்டும்.

வியாழன், ஜூன் 15, 2017

குறள் எண்: 0683 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0683}

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு

விழியப்பன் விளக்கம்: கற்றறிந்தோர் முன், நூல்களைக் கற்று வல்லவனாவது;  வேலேந்தியோர் முன், வெற்றியை ஈட்டும் வினைகளை உரைக்கும் தூதுவர்களின் பண்பாகும்.
(அது போல்...)
குடும்பத்தினர் முன், இல்லறத்தைச் சிறப்பித்து வாழ்வது; சமூகத்தினர் முன், ஒழுக்கத்தை போதிக்கும் பணியை மேற்கொள்ளும் படைப்பாளிகளின் குணமாகும்.

புதன், ஜூன் 14, 2017

குறள் எண்: 0682 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0682}

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

விழியப்பன் விளக்கம்: அன்பு/அறிவு/தெளிவாக உரைக்கும் சொல்வன்மை - இம்மூன்றும், தூது உரைப்பவருக்கு முக்கியமான காரணிகளாகும்.
(அது போல்...)
நம்பிக்கை/உண்மை/பரஸ்பரம் பாசத்தைப் பகிர்தல் - இம்மூன்றும், இல்லறத்தில் இணைவோர்க்குத் தேவையான பண்புகளாகும்.

செவ்வாய், ஜூன் 13, 2017

குறள் எண்: 0681 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0681}

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

விழியப்பன் விளக்கம்: அன்பு பரிமாறுவது/ஒழுக்கமான குடும்பத்தைச் சேர்ந்திருப்பது/அரசர் விரும்பும் பண்புடனிருப்பது - போன்ற குணங்களே, தூது செல்வோரின் அடிப்படையாகும்.
(அது போல்...)
அறம் பேணுவது/இயல்பான சமூகத்தைச் சார்ந்திருப்பது/குடும்பத்தினரின் அன்புக்கு உள்ளாவது - போன்ற காரணிகளே, இல்லறம் நடத்துவோரின் அம்சமாகும்.

திங்கள், ஜூன் 12, 2017

அதிகாரம் 068: வினைசெயல்வகை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை

0671.  சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
           தாழ்ச்சியுள் தங்குதல் தீது

           விழியப்பன் விளக்கம்: செயல்திட்டத்தின் குறிக்கோள், செயலைச் செய்து முடிக்கும்
           துணிவை அடைவதாகும்; அத்துணிவைச் செயல்படுத்த காலதாமதம் ஆகுதல் தீமையாகும்.
(அது போல்...)
           இல்லறத்தின் அடிப்படை, உறவுகளைப் பேணிக் காக்கும் அன்பை வளர்ப்பதாகும்;
           அவ்வன்பைத் தொடரும் முனைப்பைத் தவறுதல் பழியாகும்.
      
0672.  தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
           தூங்காது செய்யும் வினை

           விழியப்பன் விளக்கம்: தாமதித்துச் செய்யவேண்டிய வினைகளை, தாமதித்துச்
           செய்யவேண்டும்! தாமதமின்றி செய்யவேண்டிய வினைகளில், தாமதம் செய்யக்கூடாது!
(அது போல்...)
           விலக்கி வைக்கவேண்டிய உறவுகளை, விலக்கி வைக்கவேண்டும்! விலக்காமல்
           பேணவேண்டிய உறவுகளை, விலக்கி வைக்கக்கூடாது!
           
0673.  ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
           செல்லும்வாய் நோக்கிச் செயல்

           விழியப்பன் விளக்கம்: இயலும் சூழல்களில் எல்லாம், வினைகளைச் செய்வது நல்லது;
           இயலாது போழ்து, சாதகமான வழியைக் கண்டறிந்து செய்யவேண்டும்.
(அது போல்...)
           முடிந்த நிகழ்வுகளில் எல்லாம், சிந்தனைகளைச் செலுத்துவது நல்லது; முடியாத போது,
           சரியான தீர்வைத் தேர்ந்தெடுத்து பழகவேண்டும்.

0674.  வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
           தீயெச்சம் போலத் தெறும்

           விழியப்பன் விளக்கம்: முற்றுப்பெறாத வினை மற்றும் பகை, இவ்விரண்டின் எச்சத்தை
           ஆராய்ந்தால்; தீயின் எச்சத்தைப் போல, அழிவை உருவாக்குவதை அறியலாம்.
(அது போல்...)
           திருப்தியற்ற காமம் மற்றும் உறவு, இவையிரண்டின் விளைவை ஆராய்ந்தால்; பூகம்பத்தின்
           விளைவைப் போல, உறுதியைத் தகர்ப்பதை உணரலாம்.

0675.  பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
           இருள்தீர எண்ணிச் செயல்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகளுக்கு முக்கியமான - பொருளாதாரம்/
           ஆயுதம்/காலம்/வினைத்திறம்/இடம் - இவை ஐந்தையும் ஆராய்ந்து, குழப்பங்கள் நீங்க
           செய்யவேண்டும்.
(அது போல்...)
           இருக்கும் உறவுகளுக்கு அடிப்படையான - உண்மை/சந்தேகமின்மை/அரவணைப்பு/
           உரிமை/அன்பு - இவை ஐந்தையும் காத்து, பரஸ்பரம் பகிர்ந்து வாழவேண்டும்.

0676.  முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
           படுபயனும் பார்த்துச் செயல்

           விழியப்பன் விளக்கம்: வினையை துவங்கும் முன், அவ்வினை  - முடியும் விதம்/தரும்
           இடையூறுகள்/முடிந்தபின் அடையும் பெரும்பயன் - இவற்றை ஆராய்ந்து துவங்கவேண்டும்.
(அது போல்...)
           உறவில் இணையும் முன், அவ்வுறவு - தொடரும் விதம்/விதைக்கும் சிக்கல்கள்/மூலம்
           கிடைக்கும் பெருமகிழ்வு - இவற்றை உணர்ந்து இணையவேண்டும்.

0677.  செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
           உள்ளறிவான் உள்ளம் கொளல்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினையைச், செய்யும் செயல்முறை என்பது;
           அவ்வினையில் முன்னனுபவம் உள்ளவரின், அறவுரையை ஏற்றுக் கொள்வதாகும்.
(அது போல்...)
           இணைந்திட்ட இல்லறத்தை, நடத்தும் வழிமுறை என்பது; இல்லறத்தில் ஈடுபட்ட
           முன்னோர்களின், வரலாற்றை அறிந்து வாழ்வதாகும்.

0678.  வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
           யானையால் யானையாத் தற்று

           விழியப்பன் விளக்கம்: ஓர் வினையைச் செய்யும்போது, இன்னுமோர் வினையையும்
           செய்வது; பயிற்சி பெற்ற யானையொன்றால், வேறொரு யானையைப் பிடிப்பதற்கு
           இணையாகும்.
(அது போல்...)
           ஒருவருக்கு உதவி செய்யும்போது, அவரின் வருங்காலத்திற்கும் உதவுவது; ஒரேயொரு
           கல்லை எறிந்து, இரண்டு காய்களைக் கொய்வதற்கு ஒப்பாகும்.

0679.  நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
           ஒட்டாரை ஒட்டிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: உறவில் உள்ளவர்களுக்கு, நல்லவற்றை செய்வதை விட;
           உறவிலிருந்து விலகி இருப்போரை இணைத்துக் கொள்வது, விரைந்து செய்யவேண்டியது
           ஆகும்.
(அது போல்...)
           நாம் அறிந்தவற்றை, பிறருக்கு சொல்வதை விட; நாம் அறியாமல் இருக்கும்
           விடயங்களைக் கேட்பதை, முதன்மையாய் எண்ணிப் பழகவேண்டும்.

0680.  உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
           கொள்வர் பெரியார்ப் பணிந்து

           விழியப்பன் விளக்கம்: அதிகாரமற்ற இடத்தில் இருப்போர், உடனிருப்போரின்
           பாதுகாப்பின்மைக்கு அஞ்சி; தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு,
           வலியோர்களுக்கு பணிவர்.
(அது போல்...)
           வருமானமற்ற நிலையில் இருப்போர், குடும்பத்தாரின் வறுமைக்கு அஞ்சி; இல்லறத்தைத்
           தொடர்ந்து நடத்தும் பொருட்டு, மேலதிகாரிகளுக்கு அடங்குவர்.

குறள் எண்: 0680 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0680}

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

விழியப்பன் விளக்கம்: அதிகாரமற்ற இடத்தில் இருப்போர், உடனிருப்போரின் பாதுகாப்பின்மைக்கு அஞ்சி; தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, வலியோர்களுக்கு பணிவர்.
(அது போல்...)
வருமானமற்ற நிலையில் இருப்போர், குடும்பத்தாரின் வறுமைக்கு அஞ்சி; இல்லறத்தைத் தொடர்ந்து நடத்தும் பொருட்டு, மேலதிகாரிகளுக்கு அடங்குவர்.

ஞாயிறு, ஜூன் 11, 2017

குறள் எண்: 0679 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0679}

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: உறவில் உள்ளவர்களுக்கு, நல்லவற்றை செய்வதை விட; உறவிலிருந்து விலகி இருப்போரை இணைத்துக் கொள்வது, விரைந்து செய்யவேண்டியது ஆகும்.
(அது போல்...)
நாம் அறிந்தவற்றை, பிறருக்கு சொல்வதை விட; நாம் அறியாமல் இருக்கும் விடயங்களைக் கேட்பதை, முதன்மையாய் எண்ணிப் பழகவேண்டும்.

சனி, ஜூன் 10, 2017

குறள் எண்: 0678 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0678}

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

விழியப்பன் விளக்கம்: ஓர் வினையைச் செய்யும்போது, இன்னுமோர் வினையையும் செய்வது; பயிற்சி பெற்ற யானையொன்றால், வேறொரு யானையைப் பிடிப்பதற்கு இணையாகும்.
(அது போல்...)
ஒருவருக்கு உதவி செய்யும்போது, அவரின் வருங்காலத்திற்கும் உதவுவது; ஒரேயொரு கல்லை எறிந்து, இரண்டு காய்களைக் கொய்வதற்கு ஒப்பாகும்.

வெள்ளி, ஜூன் 09, 2017

குறள் எண்: 0677 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0677}

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்

விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினையைச், செய்யும் செயல்முறை என்பது; அவ்வினையில் முன்னனுபவம் உள்ளவரின், அறவுரையை ஏற்றுக் கொள்வதாகும்.
(அது போல்...)
இணைந்திட்ட இல்லறத்தை, நடத்தும் வழிமுறை என்பது; இல்லறத்தில் ஈடுபட்ட முன்னோர்களின், வரலாற்றை அறிந்து வாழ்வதாகும்.

வியாழன், ஜூன் 08, 2017

குறள் எண்: 0676 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0676}

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

விழியப்பன் விளக்கம்: வினையை துவங்கும் முன், அவ்வினை  - முடியும் விதம்/தரும் இடையூறுகள்/முடிந்தபின் அடையும் பெரும்பயன் - இவற்றை ஆராய்ந்து துவங்கவேண்டும்.
(அது போல்...)
உறவில் இணையும் முன், அவ்வுறவு - தொடரும் விதம்/விதைக்கும் சிக்கல்கள்/மூலம் கிடைக்கும் பெருமகிழ்வு - இவற்றை உணர்ந்து இணையவேண்டும்.

புதன், ஜூன் 07, 2017

குறள் எண்: 0675 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0675}

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகளுக்கு முக்கியமான - பொருளாதாரம்/ஆயுதம்/காலம்/வினைத்திறம்/இடம் - இவை ஐந்தையும் ஆராய்ந்து, குழப்பங்கள் நீங்க செய்யவேண்டும்.
(அது போல்...)
இருக்கும் உறவுகளுக்கு அடிப்படையான - உண்மை/சந்தேகமின்மை/அரவணைப்பு/உரிமை/அன்பு - இவை ஐந்தையும் காத்து, பரஸ்பரம் பகிர்ந்து வாழவேண்டும்.

செவ்வாய், ஜூன் 06, 2017

குறள் எண்: 0674 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0674}

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

விழியப்பன் விளக்கம்: முற்றுப்பெறாத வினை மற்றும் பகை, இவ்விரண்டின் எச்சத்தை ஆராய்ந்தால்; தீயின் எச்சத்தைப் போல, அழிவை உருவாக்குவதை அறியலாம்.
(அது போல்...)
திருப்தியற்ற காமம் மற்றும் உறவு, இவையிரண்டின் விளைவை ஆராய்ந்தால்; பூகம்பத்தின் விளைவைப் போல, உறுதியைத் தகர்ப்பதை உணரலாம்.

திங்கள், ஜூன் 05, 2017

குறள் எண்: 0673 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0673}

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

விழியப்பன் விளக்கம்: இயலும் சூழல்களில் எல்லாம், வினைகளைச் செய்வது நல்லது; இயலாது போழ்து, சாதகமான வழியைக் கண்டறிந்து செய்யவேண்டும்.
(அது போல்...)
முடிந்த நிகழ்வுகளில் எல்லாம், சிந்தனைகளைச் செலுத்துவது நல்லது; முடியாத போது, சரியான தீர்வைத் தேர்ந்தெடுத்து பழகவேண்டும்.

ஞாயிறு, ஜூன் 04, 2017

குறள் எண்: 0672 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0672}

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

விழியப்பன் விளக்கம்: தாமதித்துச் செய்யவேண்டிய வினைகளை, தாமதித்துச் செய்யவேண்டும்! தாமதமின்றி செய்யவேண்டிய வினைகளில், தாமதம் செய்யக்கூடாது!
(அது போல்...)
விலக்கி வைக்கவேண்டிய உறவுகளை, விலக்கி வைக்கவேண்டும்! விலக்காமல் பேணவேண்டிய உறவுகளை, விலக்கி வைக்கக்கூடாது!

சனி, ஜூன் 03, 2017

குறள் எண்: 0671 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினை செயல்வகை; குறள் எண்: 0671}

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

விழியப்பன் விளக்கம்: செயல்திட்டத்தின் குறிக்கோள், செயலைச் செய்து முடிக்கும் துணிவை அடைவதாகும்; அத்துணிவைச் செயல்படுத்த காலதாமதம் ஆகுதல் தீமையாகும்.
(அது போல்...)
இல்லறத்தின் அடிப்படை, உறவுகளைப் பேணிக் காக்கும் அன்பை வளர்ப்பதாகும்; அவ்வன்பைத் தொடரும் முனைப்பைத் தவறுதல் பழியாகும்.

வெள்ளி, ஜூன் 02, 2017

அதிகாரம் 067: வினைத்திட்பம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்

0661.  வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
           மற்றவை எல்லாம் பிற

           விழியப்பன் விளக்கம்: செயல்களைச் செய்யும் வைராக்கியம் என்பது, ஒருவரின் மனதின்
           வைராக்கியமாகும்; மற்றவை எல்லாம் வேறானவை ஆகும்.
(அது போல்...)
           ஊழல்களை ஒழிக்கும் அடிப்படை என்பது, ஆட்சியாளரின் நேர்மையின் அடிப்படையாகும்;
           மற்றவை எல்லாம் போலியானவை ஆகும்.
      
0662.  ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
           ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

           விழியப்பன் விளக்கம்: வினைகளைத் தடையில்லாமல் செய்வது மற்றும் தடைபட்டாலும்
           மனம் தளராதது - இவ்விரண்டின் வழி நடப்பதே, பகுத்தறிந்தோரின் கோட்பாடு என்பர்.
(அது போல்...)
           உறவுகளைப் பிரியாமல் தொடர்வது மற்றும் பிரிந்தாலும் பகையுணர்வு கொள்ளாதது -
           இவ்விரண்டு உறுதிகளைக் கடைப்பிடிப்பதே, சமுதாயத்தின் அடிப்படை என்பர்.
           
0663.  கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
           எற்றா விழுமந் தரும்

           விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினையை முடித்து, இறுதியில் வெளிப்படுத்துவதே
           ஆளுமை ஆகும்; இடையில் வெளிப்படுத்துவது, சரிசெய்ய முடியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
           பெறப்பட்ட பிறப்பை வாழ்ந்து, செயற்கையாய் மரணிப்பதே பிறவி ஆகும்; செயற்கையாய்
           முடிப்பது, பரிகாரம் இல்லாத பாவத்தை அளிக்கும்.

0664.  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
           சொல்லிய வண்ணம் செயல்

           விழியப்பன் விளக்கம்: "கொடுக்கப்பட்ட வினையை, எவ்வாறு செய்வதென" வாயால்
           சொல்வது எல்லோர்க்கும் எளிதாகும்; ஆனால், அப்படி சொல்லிய வண்ணம் செய்தல்
           அரிதானது!
(அது போல்...)
           "நிச்சயிக்கப்பட்ட உறவை, எப்படி தொடர்வதென" அறிவுரையாய் சொல்வது எவர்க்கும்
           எளிதாகும்; ஆனால், அப்படி அறிவுறுத்திய வண்ணம் வாழ்வது சிரமமானது!

0665.  வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
           ஊறெய்தி உள்ளப் படும்

           விழியப்பன் விளக்கம்: சிந்தனைத் திறனால், வினைத் திறனை வளர்த்து புகழ்பெற்ற
           அமைச்சர்கள்; அரசாள்பவரின் கவனத்திற்கு உள்ளாகி, எல்லோராலும் பாராட்டப்படுவர்.
(அது போல்...)
           உறவுப் பகிர்வால், உடைமைப் பகிர்வை செய்து வாழ்ந்திடும் அன்பர்கள், சமுதாயத்தின்
           சான்றாக மாறி, அனைவராலும் தொடரப்படுவர்.

0666.  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
           திண்ணியர் ஆகப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்ய நினைப்போர், தேவையான மனவுறுதியை
           அடையப் பெற்றால்; செய்ய நினைத்த வினைகளை, நினைத்தபடியே செய்து முடிப்பர்.
(அது போல்...)
           சமுதாயத்தை மாற்ற எண்ணுவோர், உறுதியான கொள்கையை வகுத்து இருப்பின்;
           செய்ய எண்ணிய மாற்றத்தை, எண்ணியபடியே மாற்றி முடிப்பர்.

0667.  உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 
           அச்சாணி அன்னார் உடைத்து

           விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்வோரின், உருவத்தை இகழாமல்
           இருக்கவேண்டும்; அவர்கள் உருண்டோடும் பெரியத் தேரைத் தாங்கும், அச்சாணிக்கு
           இணையானவர்கள்.
(அது போல்...)
           உறவுகளில் இருப்போரின், ஏழ்மையை அவமதிக்காமல் இருக்கவேண்டும்; அவர்கள்
           சீறிப்பாயும் சொகுசு விமானத்தைத் தரையிறக்கும், சக்கரத்திற்கு ஒப்பாவர்.

0668.  கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
           தூக்கம் கடிந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: குழப்பம் இல்லாமல், தெளிவான சிந்தனையோடு திட்டமிட்ட
           வினைகளை; மனச்சோர்வும்/உடற்சோர்வும் இல்லாமல், விரைந்து செய்யவேண்டும்.
(அது போல்...)
           அறவழியை மீறாமல், உண்மையான உழைப்பால் பெற்ற வருமானத்தை; பேராசையும்/
           பொறாமையும் இல்லாமல், மனமுவந்து பகிரவேண்டும்.

0669.  துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
           இன்பம் பயக்கும் வினை

           விழியப்பன் விளக்கம்: கேடில்லாமல் இன்பம் பயக்கும் வினைகளை, எத்தனைத் துன்பங்கள்
           தடையாக வந்தாலும்; துணிவைத் துணையாகக் கொண்டு செய்யவேண்டும்.
(அது போல்...)
           தடையில்லாமால் ஊக்கம் அளிக்கும் நட்புகளை, எத்தனை ஊடல்கள் பிரச்சனையாக
           வளர்ந்தாலும்; அன்பை அறமாகக் கருதித் தொடரவேண்டும்.

0670.  எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
           வேண்டாரை வேண்டாது உலகு

           விழியப்பன் விளக்கம்: எவ்வகை வைராக்கியம் இருப்பினும், வினையை முடிக்கும்
           வைராக்கியத்தை விரும்பவில்லை எனில்; அவர்களை இவ்வுலம் விரும்பாது.
(அது போல்...)
           எல்லா உறவுகள் இருப்பினும், பெற்றோரைப் பேணும் உறவை வளர்க்கவில்லை எனில்;
           அவர்களை விண்ணுலகம் போற்றாது.

குறள் எண்: 0670 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0670}

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு

விழியப்பன் விளக்கம்: எவ்வகை வைராக்கியம் இருப்பினும், வினையை முடிக்கும் வைராக்கியத்தை விரும்பவில்லை எனில்; அவர்களை இவ்வுலம் விரும்பாது.
(அது போல்...)
எல்லா உறவுகள் இருப்பினும், பெற்றோரைப் பேணும் உறவை வளர்க்கவில்லை எனில்; அவர்களை விண்ணுலகம் போற்றாது.

வியாழன், ஜூன் 01, 2017

குறள் எண்: 0669 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0669}

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

விழியப்பன் விளக்கம்: கேடில்லாமல் இன்பம் பயக்கும் வினைகளை, எத்தனைத் துன்பங்கள் தடையாக வந்தாலும்; துணிவைத் துணையாகக் கொண்டு செய்யவேண்டும்.
(அது போல்...)
தடையில்லாமால் ஊக்கம் அளிக்கும் நட்புகளை, எத்தனை ஊடல்கள் பிரச்சனையாக வளர்ந்தாலும்; அன்பை அறமாகக் கருதித் தொடரவேண்டும்.