திங்கள், ஜூன் 12, 2017

குறள் எண்: 0680 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0680}

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

விழியப்பன் விளக்கம்: அதிகாரமற்ற இடத்தில் இருப்போர், உடனிருப்போரின் பாதுகாப்பின்மைக்கு அஞ்சி; தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, வலியோர்களுக்கு பணிவர்.
(அது போல்...)
வருமானமற்ற நிலையில் இருப்போர், குடும்பத்தாரின் வறுமைக்கு அஞ்சி; இல்லறத்தைத் தொடர்ந்து நடத்தும் பொருட்டு, மேலதிகாரிகளுக்கு அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக