சனி, ஜூன் 10, 2017

குறள் எண்: 0678 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0678}

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

விழியப்பன் விளக்கம்: ஓர் வினையைச் செய்யும்போது, இன்னுமோர் வினையையும் செய்வது; பயிற்சி பெற்ற யானையொன்றால், வேறொரு யானையைப் பிடிப்பதற்கு இணையாகும்.
(அது போல்...)
ஒருவருக்கு உதவி செய்யும்போது, அவரின் வருங்காலத்திற்கும் உதவுவது; ஒரேயொரு கல்லை எறிந்து, இரண்டு காய்களைக் கொய்வதற்கு ஒப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக