சனி, ஜூன் 17, 2017

குறள் எண்: 0685 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0685}

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது

விழியப்பன் விளக்கம்: தேவையானதைத் தொகுத்துச் சொல்லி, தேவையற்றதைத் தவிர்த்து; மனம் மகிழும் வண்ணம் சொல்லி, நன்மைகளை பெற்றுத் தருவதே தூது ஆகும்.
(அது போல்...)
உயர்வானதை ஊரறியச் சொல்லி, உயர்வற்றதை மறைத்து; சுற்றம் பெருமை கொள்ளும் வண்ணம், உறவுகளைப் பேணுவதே இல்லறம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக