புதன், ஜூன் 07, 2017

குறள் எண்: 0675 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0675}

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட வினைகளுக்கு முக்கியமான - பொருளாதாரம்/ஆயுதம்/காலம்/வினைத்திறம்/இடம் - இவை ஐந்தையும் ஆராய்ந்து, குழப்பங்கள் நீங்க செய்யவேண்டும்.
(அது போல்...)
இருக்கும் உறவுகளுக்கு அடிப்படையான - உண்மை/சந்தேகமின்மை/அரவணைப்பு/உரிமை/அன்பு - இவை ஐந்தையும் காத்து, பரஸ்பரம் பகிர்ந்து வாழவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக