சனி, ஜூன் 03, 2017

குறள் எண்: 0671 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0671}

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

விழியப்பன் விளக்கம்: செயல்திட்டத்தின் குறிக்கோள், செயலைச் செய்து முடிக்கும் துணிவை அடைவதாகும்; அத்துணிவைச் செயல்படுத்த காலதாமதம் ஆகுதல் தீமையாகும்.
(அது போல்...)
இல்லறத்தின் அடிப்படை, உறவுகளைப் பேணிக் காக்கும் அன்பை வளர்ப்பதாகும்; அவ்வன்பைத் தொடரும் முனைப்பைத் தவறுதல் பழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக