ஞாயிறு, ஜனவரி 31, 2016

குறள் எண்: 0182 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0182}

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை

விழியப்பன் விளக்கம்: ஒருவரைப் பழித்து புறம் பேசிவிட்டு, நேரில் பொய்யாக நகைத்துப் பேசுவது; அறநெறிகளை அழித்து, பாவச்செயல்களை செய்தலை விட தீமையானது.
(அது போல்...)
மக்களைப் பற்றிய அக்கறையை விலக்கிவிட்டு, பிரச்சாரத்தில் பொய்யாக வாக்குறுதி கொடுப்பது; உயிர்களைக் கொன்று, பாவங்களைச் சேர்ப்பதை விட ஆபத்தானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக