வியாழன், அக்டோபர் 04, 2018

குறள் எண்: 1159 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1159}

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

விழியப்பன் விளக்கம்: நெருப்பு, தன்னைத் தீண்டினால் சுடுவதை விடுத்து; காதலால் விளையும் காமநோய் போல், விட்டு விலகும்போது சுட வல்லதாகுமோ?!
(அது போல்...)
மனிதன், தன்னை நேசிப்பதால் மகிழ்வதை விடுத்து; தாய்மையால் விளையும் அன்புள்ளம் போல், வெறுத்து பேசும்போது மகிழ முயல்வானோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக