திங்கள், அக்டோபர் 15, 2018

குறள் எண்: 1170 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1170}

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்

விழியப்பன் விளக்கம்: பிரிந்திருக்கும் காதலரைச் சேர, மனதைப் போல் ஊடுருவிச் செல்ல முடியுமெனில்; இப்படி கண்ணீர் வெள்ளத்தில், என் கண்கள் நீந்தமாட்டாது தானே?
(அது போல்...)
நாட்டிலிருக்கும் குடும்பத்தைக் காண, மின்னலைப் போல் விரைந்து செல்ல முடியுமெனில்; இப்படி சிந்தனை வலையில், என் செயல்கள் சிறைபடாது தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக