சனி, நவம்பர் 19, 2016

குறள் எண்: 0475 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0475}

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

விழியப்பன் விளக்கம்: இலகுவான மயிலிறகே ஆயினும், ஏற்றப்படும் வண்டியின் அச்சாணியின் வலிமையை அறியாமல்; அளவுக்கதிகமாக ஏற்றினால், அச்சு முறிந்துவிடும்.
(அது போல்...)
குறைவான செலவினமே ஆயினும், கையிலிருக்கும் இருப்பின் அளவைக் கணக்கில் கொள்ளாமல்; தொடர்ந்து செலவிட்டால், வறுமை ஆட்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக