சனி, அக்டோபர் 31, 2015

அதிகாரம் 009: விருந்தோம்பல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 009 - விருந்தோம்பல்

0081.  இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
           வேளாண்மை செய்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: இருப்பவற்றைப் பேணி, இல்வாழ்க்கை வாழ்வதெல்லாம்; 
           விருந்தினர்களைப் பேணி, அவர்களுக்கு தேவையானதைச் செய்வதற்காகவே .
(அது போல்...)
           உடம்பைப் பேணி, உயிர்த்திருக்கும் காலமெல்லாம்; மனிதத்தைப் பேணி,
           மனிதகுலத்தைத் தழைத்திட வைப்பதற்காகவே.

0082.  விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
           மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

           விழியப்பன் விளக்கம்: விருந்தினர்கள் வெளியே காத்திருக்க; சாகா-மருந்தே ஆயினும் - 
           தனித்து உண்பது, விரும்பத்தக்க முறையன்று.
(அது போல்...)
           மக்கள் குடிசையும் இல்லாதிருக்க; வைர-மாளிகையே எனினும் - தனியே அனுபவிப்பது, 
           ஆட்சியாளரின் மாண்பன்று.

0083.  வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
           பருவந்து பாழ்படுதல் இன்று

           விழியப்பன் விளக்கம்: நாள்தோறும் - விருந்தினர்களை, புன்னகையுடன் பேணுவோரின் 
           வாழ்க்கை; ஒருநாளும் துன்பப்பட்டு கெட்டுப்போவதில்லை.
(அது போல்...)
           எந்நிலையிலும் - எல்லாவற்றிலும், சமசரமில்லாத அறநெறிப் பழகுவோரை; 
           தோல்வியெதுவும் நிலைகுலைக்கச் செய்வதில்லை.

0084.  அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
           நல்விருந்து ஓம்புவான் இல்

           விழியப்பன் விளக்கம்: முகம்-மலர்ந்து, சிறப்பாக விருந்தினரைப் பேணுவோரின் வீட்டில்; 
           நெஞ்ச-அகம் மலர்ந்து, திருமகள் வாழ்வாள்.
(அது போல்...)
           தேடல்-வளர்க்கும், சிறந்த சிந்தனைகளைப் பரப்புவோரின் படைப்புகளில்; படைப்பு-திறம் 
           வளர்க்க, பிரம்மா அருள்புரிவார்.
          
0085.  வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
           மிச்சில் மிசைவான் புலம்

           விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணியபின், எஞ்சியதை உண்பவனின் வயலில்; 
           விதையை விதைக்கவும் வேண்டுமோ?
(அது போல்...)
           குடும்பத்தினர் தேவை பூர்த்தியானபின், சுயத்தேவையைப் பற்றி எண்ணுவோர்க்கு; 
           அறநெறியைப் போதிக்கவும் வேண்டுமோ?

0086.  செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
           நல்வருந்து வானத் தவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வந்த விருந்தினர்களைப் பேணி அனுப்பிவிட்டு, வரும் 
           விருந்தினர்களுக்கு காத்திருப்பவன்; விண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல 
           விருந்தினனாவான்.
(அது போல்...)
           வந்த நோயைக் குணப்படுத்திவிட்டு, வரவிருக்கும் நோய்களைத் தடுக்க முனைபவன்; 
           மண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல முன்னோடியாவன்.

0087.  இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
           துணைத்துணை வேள்விப் பயன்

           விழியப்பன் விளக்கம்: விருந்தோம்பல் எனும் வேள்வியின் பயன், இத்தனை அளவு 
           என்றேதுமில்லை; அது, விருந்தினரின் தன்மையைச் சார்ந்தது.
(அது போல்...)
           வாய்மை எனும் அறத்தின் பயன், இவ்வளவுவென்ற வரையறை ஏதுமில்லை; அது, 
           கடைப்பிடிப்பவரின் வைராக்கியத்தைப் பொறுத்தது.

0088.  பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
           வேள்வி தலைப்படா தார்

           விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணும் வேள்வியைச் செய்யாதவர்கள்; வருந்தி 
           சேர்த்த செல்வத்தின் மீதான பற்றை, இழந்தோம் என்பர்.
(அது போல்...)
           மனிதத்தைப் பேணும் செயல்களைச் செய்யாதவர்கள்; விரும்பி வாழ்ந்த வாழ்க்கையின் 
           மீதான பிணைப்பை, இழந்தோம் என்பர்.

0089.  உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
           மடமை மடவார்கண் உண்டு

           விழியப்பன் விளக்கம்: செல்வமிருந்தும், விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாத 
           அறிவிலிகளிடம்; அறியாமை எனும் "வறுமை" உண்டு.
(அது போல்...)
           பக்தியிருந்தும், நம்பிக்கைகளைப் பகுத்தறியத் தெரியாத ஆத்திகர்களிடம்; மூட-
           நம்பிக்கை எனும் "அகந்தை" உண்டு.

0090.  மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
           நோக்கக் குழையும் விருந்து

           விழியப்பன் விளக்கம்: முகர்வதால் சுருங்கும் அனிச்சம் பூவைப்போல்; உபசரிப்பவரின் 
           முகமாற்றத்தைக் கண்டு, விருந்தினரின் முகம் சுருங்கும்.
 (அது போல்...)
           பசியினால் வாடும் குழந்தையின் முகம்போல்; பொய்யானவரின் செயல்மாற்றத்தைக்
           கண்டு, உண்மையானவரின் மனம் துன்புறும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

குறள் எண்: 0090 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0090}

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குழையும் விருந்து

விழியப்பன் விளக்கம்: முகர்வதால் சுருங்கும் அனிச்சம் பூவைப்போல்; உபசரிப்பவரின் முகமாற்றத்தைக் கண்டு, விருந்தினரின் முகம் சுருங்கும்.
(அது போல்...)
பசியினால் வாடும் குழந்தையின் முகம்போல்; பொய்யானவரின் செயல்மாற்றத்தைக் கண்டு, உண்மையானவரின் மனம் துன்புறும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 30, 2015

குறள் எண்: 0089 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0089}

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு

விழியப்பன் விளக்கம்: செல்வமிருந்தும், விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாத அறிவிலிகளிடம்; அறியாமை எனும் "வறுமை" உண்டு.
(அது போல்...)
பக்தியிருந்தும், நம்பிக்கைகளைப் பகுத்தறியத் தெரியாத ஆத்திகர்களிடம்; மூட-நம்பிக்கை எனும் "அகந்தை" உண்டு.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், அக்டோபர் 29, 2015

குறள் எண்: 0088 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0088}

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்

விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணும் வேள்வியைச் செய்யாதவர்கள்; வருந்தி சேர்த்த செல்வத்தின் மீதான பற்றை, இழந்தோம் என்பர்.
(அது போல்...)
மனிதத்தைப் பேணும் செயல்களைச் செய்யாதவர்கள்; விரும்பி வாழ்ந்த வாழ்க்கையின் மீதான பிணைப்பை, இழந்தோம் என்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், அக்டோபர் 28, 2015

குறள் எண்: 0087 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0087}

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்

விழியப்பன் விளக்கம்: விருந்தோம்பல் எனும் வேள்வியின் பயன், இத்தனை அளவு என்றேதுமில்லை; அது, விருந்தினரின் தன்மையைச் சார்ந்தது.
(அது போல்...)
வாய்மை எனும் அறத்தின் பயன், இவ்வளவுவென்ற வரையறை ஏதுமில்லை; அது, கடைப்பிடிப்பவரின் வைராக்கியத்தைப் பொறுத்தது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், அக்டோபர் 27, 2015

குறள் எண்: 0086 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0086}

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு

விழியப்பன் விளக்கம்: வந்த விருந்தினர்களைப் பேணி அனுப்பிவிட்டு, வரும் விருந்தினர்களுக்கு காத்திருப்பவன்; விண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல விருந்தினனாவான்.
(அது போல்...)
வந்த நோயைக் குணப்படுத்திவிட்டு, வரவிருக்கும் நோய்களைத் தடுக்க முனைபவன்; மண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல முன்னோடியாவன்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், அக்டோபர் 26, 2015

குறள் எண்: 0085 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0085}

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணியபின், எஞ்சியதை உண்பவனின் வயலில்; விதையை விதைக்கவும் வேண்டுமோ?
(அது போல்...)
குடும்பத்தினர் தேவை பூர்த்தியானபின், சுயத்தேவையைப் பற்றி எண்ணுவோர்க்கு; அறநெறியைப் போதிக்கவும் வேண்டுமோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, அக்டோபர் 25, 2015

குறள் எண்: 0084 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0084}

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்

விழியப்பன் விளக்கம்: முகம்-மலர்ந்து, சிறப்பாக விருந்தினரைப் பேணுவோரின் வீட்டில்; நெஞ்ச-அகம் மலர்ந்து, திருமகள் வாழ்வாள்.
(அது போல்...)
தேடல்-வளர்க்கும், சிறந்த சிந்தனைகளைப் பரப்புவோரின் படைப்புகளில்; படைப்பு-திறம் வளர்க்க, பிரம்மா அருள்புரிவார்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, அக்டோபர் 24, 2015

குறள் எண்: 0083 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0083}

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

விழியப்பன் விளக்கம்: நாள்தோறும் - விருந்தினர்களை, புன்னகையுடன் பேணுவோரின் வாழ்க்கை; ஒருநாளும் துன்பப்பட்டு கெட்டுப்போவதில்லை.
(அது போல்...)
எந்நிலையிலும் - எல்லாவற்றிலும், சமசரமில்லாத அறநெறிப் பழகுவோரை; தோல்வியெதுவும் நிலைகுலைக்கச் செய்வதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 23, 2015

குறள் எண்: 0082 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0082}

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விழியப்பன் விளக்கம்: விருந்தினர்கள் வெளியே காத்திருக்க; சாகா-மருந்தே ஆயினும் - தனித்து உண்பது, விரும்பத்தக்க முறையன்று.
(அது போல்...)
மக்கள் குடிசையும் இல்லாதிருக்க; வைர-மாளிகையே எனினும் - தனியே அனுபவிப்பது, ஆட்சியாளரின் மாண்பன்று.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், அக்டோபர் 22, 2015

குறள் எண்: 0081 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0081}

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு

விழியப்பன் விளக்கம்: இருப்பவற்றைப் பேணி, இல்வாழ்க்கை வாழ்வதெல்லாம்; விருந்தினர்களைப் பேணி, அவர்களுக்கு தேவையானதைச் செய்வதற்காகவே .
(அது போல்...)
உடம்பைப் பேணி, உயிர்த்திருக்கும் காலமெல்லாம்; மனிதத்தைப் பேணி, மனிதகுலத்தை தழைத்திட வைப்பதற்காகவே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், அக்டோபர் 21, 2015

அதிகாரம் 008: அன்புடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 008 - அன்புடைமை

0071.  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
           புன்கணீர் பூசல் தரும்

           விழியப்பன் விளக்கம்: அன்பை அடைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? நம் அன்புக்குரியவரின் 
           துன்பம் கண்டு; அது, கண்ணீராய் - ஆரவாரப் பெருக்கெடுக்கும்.
(அது போல்...)
           மனசாட்சியை அழிக்கும் ஆயுதம் உண்டோ? நம் எதிரியின் வீழ்ச்சியே ஆயினும்; அது, 
           சிந்தனையாய் - நம்மை சலனப்படுத்தும்.

0072.  அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
           என்பும் உரியர் பிறர்க்கு

           விழியப்பன் விளக்கம்: அன்பில்லாதோர், அனைத்தும் தமக்கே சொந்தமெனக் கருதுவர்;  
           அன்புடையோர் - தம் உடலும், பிறர்க்கு சொந்தமென நினைப்பர்.
(அது போல்...)
           அமைதியற்றோர், பிறரின் மகிழ்ச்சியைக் கெடுக்க எண்ணுவர்; அமைதியானோர், தன் 
           மகிழ்ச்சியை, எல்லோர்க்கும் கடத்திட முயல்வர்.

0073.  அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
           என்போடு இயைந்த தொடர்பு.

           விழியப்பன் விளக்கம்: அன்போடு இரண்டற கலந்த வாழ்க்கையின் பயன்; உன்னதமான 
           உயிர்க்கும், உடலுக்கும் இடையிலானத் தொடர்பைப் போன்றது.
(அது போல்...)
           உண்மையோடு இணைந்த செயல்களின் பலம்; உன்னதமான தொப்பூழ்-கொடிக்கும், 
           கருவுக்கும் இடையிலான இணைப்பைப் போன்றது.

0074.  அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
           நண்பென்னும் நாடாச் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: அன்பு, ஒருவரை அன்புடையவராய் இருக்கச்செய்யும்; மேலும், 
           எளிதில் அடையமுடியாத - நட்பெனும் சிறப்பையும் கொடுக்கும்.
(அது போல்...)
           உண்மை, ஒருவரை அறத்தைத் தழுவச்செய்யும்; மேலும், என்றும் அழிந்திடாத -  
           "மகாத்மா"வெனும் உன்னதத்தையும் அளிக்கும்.
          
0075.  அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
           இன்புற்றார் எய்தும் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: இவ்வுலகில், இன்பமாய் வாழ்பவர்களின் சிறப்பானது; அவர்களின் 
           அன்புள்ளம் நிறைந்த வாழ்க்கையால் விளைந்த பயனாகும்.
(அது போல்...)
           சமூகத்தில், மதிப்புடன் வாழ்பவர்களின் புகழானது; அவர்களின் அறநெறித் தவறாத 
           பயணத்துக்குக் கிடைத்த வெகுமதியாகும்.

0076.  அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
           மறத்திற்கும் அஃதே துணை

           விழியப்பன் விளக்கம்: அறம்சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே, அன்பு துணையிருக்கும் 
           என்போர்; வீரச்செயல்களுக்கும், அதுவே துணையாகும் என்பதை அறியாதவராவர்.
(அது போல்...)
           பொருளாதாரத் தேவைகளுக்கு மட்டுமே, தந்தை உதவுவார் என்போர்; குழந்தை-
           வளர்ப்பிலும், "தந்தையானவன் தாயுமானவன்" என்பதை உணராதவராவர்.

0077.  என்பி லதனை வெயில்போலக் காயுமே 
           அன்பி லதனை அறம்

           விழியப்பன் விளக்கம்: எலும்பில்லாத உயிர்களை, சூரியனின் வெப்பம் சுட்டெரிப்பது 
           போல்; அன்பில்லாத பிறவிகளை, அறம் உழற்றும்.
(அது போல்...)
           பொன்னான நேரத்தை, செயல்வடிவற்ற பேச்சுகள் வீனடிப்பது போல்; முறையற்ற அரசு, 
           மக்களை வருத்தும்.

0078.  அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
           வற்றல் மரந்தளிர்த் தற்று

           விழியப்பன் விளக்கம்: உளத்தில் அன்பில்லாதவரின் வாழ்கை; ஈரமற்ற வன்மையான 
           நிலத்தில், உலர்ந்துபோன மரம் துளிர்ப்பதைப் போன்றது.
(அது போல்...)
           உருவாக்கியவரே பின்பற்றாத கொள்கைகள்; இறந்து காய்ந்த மீனுக்கு, நீரூற்றி 
           உயிர்ப்பிக்க நினைப்பது போன்றதாகும்.

0079.  புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
           அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: உடம்பினுள் இருக்கவேண்டிய அன்பெனும் அக-உறுப்பு 
           இல்லாதவர்களுக்கு; வெளியில் இருக்கும் புற-உறுப்புகள், என்ன பயனை விளைவிக்கும்?
(அது போல்...)
           குடும்பத்தில் இருக்கவேண்டிய ஒழுக்கமெனும் அறநெறி இல்லாதவர்களுக்கு; வெளியே 
           செய்யும் சாதனைகள், என்ன புகழைக் கொடுக்கும்?

0080.  அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
           என்புதோல் போர்த்த உடம்பு

           விழியப்பன் விளக்கம்: அன்பின் வழியில் பயனிப்போரே, உயிருள்ளவர்; அன்பில்லாதவர், 
           எலும்பைத் தோலால் போர்த்திய - உயிரற்ற உடம்பாவர்.
(அது போல்...)
           அறநெறியுடன் பக்தியைப் போதிப்பவரே, மதகுருவாவர்; அறநெறியற்றவர், புனிதமான 
           உடையில் ஒளிந்திருக்கும் - உணர்வற்ற தீவிரவாதிகளாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

குறள் எண்: 0080 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0080}

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு

விழியப்பன் விளக்கம்: அன்பின் வழியில் பயனிப்போரே, உயிருள்ளவர்; அன்பில்லாதவர், எலும்பைத் தோலால் போர்த்திய - உயிரற்ற உடம்பாவர்.
(அது போல்...)
அறநெறியுடன் பக்தியைப் போதிப்பவரே, மதகுருவாவர்; அறநெறியற்றவர், புனிதமான உடையில் ஒளிந்திருக்கும் - உணர்வற்ற தீவிரவாதிகளாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், அக்டோபர் 20, 2015

குறள் எண்: 0079 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0079}

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

விழியப்பன் விளக்கம்: உடம்பினுள் இருக்கவேண்டிய அன்பெனும் அக-உறுப்பு இல்லாதவர்களுக்கு; வெளியில் இருக்கும் புற-உறுப்புகள், என்ன பயனை விளைவிக்கும்?
(அது போல்...)
குடும்பத்தில் இருக்கவேண்டிய ஒழுக்கமெனும் அறநெறி இல்லாதவர்களுக்கு; வெளியே செய்யும் சாதனைகள், என்ன புகழைக் கொடுக்கும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

"தனிமை"ச் சாபம்!!!


தனிமை...
எல்லோர்க்கும் வரமல்ல!
திருமணமாகியும்
தனித்திருப்போர்க்கு - அது

"மிகப்பெரிய சாபம்"!!!

திங்கள், அக்டோபர் 19, 2015

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை (குறள் எண்: 0078)



     "யோவ் வள்ளுவரே!" என்று தலைப்பிட்ட பதிவில் குறிப்பிடாது போல், மேலும் அதிகமாய் என்னை வியந்து-பேச வைத்துக்கொண்டிருக்கிறார் நம் பெருந்தகை. இதுவரை பல குறள்களும் கொடுக்கும் ஆழ்ந்த கருத்துகளைப் பற்றியே சிலாகித்து இருக்கிறேன். குறள் எண்: 0078-இற்கான விளக்கத்தை எழுதுவதே, மிகப்பெரிய போராட்டமாய் இருந்தது. முடிவில், என்னறிவுக்கு/என்-திருப்திக்கு முடிந்த அளவில் விளக்கவுரையை எழுதி இருப்பதாகவே நம்புகிறேன். இந்த குறளில் "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை" என்றோர் சொற்றொடர் வருகிறது. மேலோட்டமாய் பார்த்தால் "மனதில் அன்பு இல்லாவரின் வாழ்க்கை" என்பதாகத் தோன்றும். அப்படித்தான்...
  • மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை
  • அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை
  • மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை
  • அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை
  • தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை
      என்ற வகையில், பலரும் விளக்கவுரைகள் எழுதி இருக்கின்றனர். வெகுநிச்சயமாக, இதில் பொருள் குற்றம் ஏதுமில்லை - அடுத்து வரும் உவமையை ஆழ்ந்து கவனிக்காதவரை! ஆம்! அடுத்து "வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று" என்கிறார் பெருந்தகை. இதற்கு மேற்குறிப்பிட்ட விளக்கவுரைகள்...
  • பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது
  • வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது
  • வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்
  • வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்
  • வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்
    என்று பொருள்படுத்தி இருக்கின்றன. கண்டிப்பாக, குறளில் வரும் உவமை சரியாய் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடுத்துக்கொண்ட விசயத்தை விளக்குவதில் தான், தவறாய் படுகிறது எனக்கு. உவமை என்ன சொல்கிறது? முளைப்பது சிரமமாக உள்ள நிலத்தில் (பாறை/பாலை போன்றவை), ஏற்கனவே பட்டுப்போன; அதவாது, இறந்து போன ஒரு மரம் மீண்டும் துளிர்ப்பது சாத்தியம் இல்லை. இங்கே "அன்பகத் தில்லா" என்பது "உயிரற்ற/பட்டுப்போன" என்பதோடு பொருந்துகிறது; அதுபோல் "உயிர்வாழ்க்கை" என்பது "பாறை/பாலை போன்ற நிலத்தோடு" பொருந்துகிறது. ஆனால் "மீண்டும் துளிர்த்தல்" என்ற உவமானத்திற்கு நிகரான பொருள் எடுத்துக்கொண்ட விசயத்தில் எங்கே வருகிறது? இதை நன்கு யோசித்தால், என்னுடைய பார்வை உங்களுக்குப் புரியும். என்னுடைய புரிதல் கீழ்வருவது தான்:
  • அன்பு இல்லாததால் ஒருவரின் வாழ்வில், அறமும் பொய்த்துப் போகும்; எனவே, பொய்த்துப்போன அந்த அறத்தை, மீண்டும் கடைப்பிடிப்பது மிகவும் சிரமம் என்ற வகையில் - எடுத்துக்கொண்ட விசயத்தை நான் பார்க்கிறேன்.
  • அதுபோல் "வன்பாற்கண்" என்பதற்கு நேரடியாக "பாறை (அல்லது) பாலை" என்று வரையறுக்கவில்லை; ஈரப்பதமே இல்லாமல் ஒரு நிலம், மிகவும் இருக்கமாய்(வலிமையாய்) இருந்தால் எப்படி இருக்கும்? அங்கே துளிர்வது/முளைப்பது என்பது எத்தனை கடினமாக இருக்கும்? எனவே, அந்தப் பொருளிலேயே விளக்கவுரையை எழுதி இருக்கிறேன்.
      வழக்கமான - என் நிகர் விளக்கத்தை எழுத பெருத்த சிரமம் இல்லை. இன்று பதிந்த தலையங்கம், இதை ஒத்த விசயம் தான் என்பதால் - "கொள்கைகளைத் தன்னிலிருந்து துவங்காதவர்களின் செயல்பாடுகள்; இறந்து-காய்ந்த மீனுக்கு, நீரூற்றி உயிர்ப்பிக்க நினைப்பது போன்றதாகும்" - என்று எழுதி இருக்கிறேன். என்னுடைய பார்வையில்; குறள் எண் 0078-இற்கான விளக்கவுரை பின்வருவது போல் இருக்கவேண்டும் என்று வரையருத்திருக்கிறேன்.

உளத்தில் அன்பில்லாதவரின் வாழ்கையில் அறமென்பது; 
ஈரமேயில்லாத  வன்மையான நிலத்தில், உலர்ந்துபோன மரம் துளிர்ப்பதைப் போன்றது


குறள் எண்: 0078 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0078}

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

விழியப்பன் விளக்கம்: உளத்தில் அன்பில்லாதவரின் வாழ்கை; ஈரமற்ற வன்மையான நிலத்தில், உலர்ந்துபோன மரம் துளிர்ப்பதைப் போன்றது.
(அது போல்...)
உருவாக்கியவரே பின்பற்றாத கொள்கைகள்; இறந்து காய்ந்த மீனுக்கு, நீரூற்றி உயிர்ப்பிக்க நினைப்பது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கொள்கைகள் - நம் செயலில் இருந்து துவங்கவேண்டும்!!!



            சமீபகாலமாய், என் நட்பு வட்டம் ஒன்றில் அரசியல் பற்றி நிறையப் பேசி வருகிறோம். வெறும் வெட்டிப்பேச்சல்ல! நாமும், ஆக்கப்பூர்வமாய் ஏதேனும் செய்யவேண்டும் என்ற வைராக்கியத்துடன் பேசுகிறோம். எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வகையில் பொது-வாழ்வில் ஈடுபடவேண்டும்! என்ற என் எண்ணத்தை அடிக்கடிக் குறிப்பிடுவதுண்டு. இயக்கத்தின் பெயர் வரை நான் முடிவு செய்திருக்கிறேன் என்பதைக் கூட ஒருநாள் தெரிவித்தேன். பெயர் என்பதில் எனக்கு எப்போதுமே; ஒரு தனித்த எண்ணமும்/புரிதலும் உண்டு. அதைத்தான் "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை..." என்ற தலையங்கத்தில் விவரித்திருந்தேன். இயக்கத்தின் பெயர் என்ன? என்று கேட்டார்கள்; நான் இப்போதைக்கு சொல்ல விருப்பமில்லை என்று மறுத்துவிட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால், அவர்களிடம் சொல்லாமல் பின் யாரிடம் சொல்லப்போகிறேன்? இந்த சூழலில், இரண்டு நாட்களுக்கு முன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது?!...

            என்ற கேள்வி எழுந்தது. நான் சில முறை சொல்லி இருந்ததை மீண்டும் நினைவு கூர்ந்தேன்: என் சொந்த வாழ்க்கையின் தேவை பூர்த்தியான பின்னர் தான்; பொது-வாழ்வில் என்னை இணைத்துக் கொள்வேன் என்பதே அது. என் மேல் கொண்ட அன்பு மிகுதியால், என் மேல் இருக்கும் நம்பிக்கையால் "இல்லை! சொந்த வாழ்வில் பூர்த்தியாவது சாத்தியம் இல்லை! எனவே, உடனடியாக ஆரம்பிப்பதே நல்லது!" என்றனர். என் தேவையை நானே நிர்ணயித்து இருக்கிறேன்; கண்டிப்பாக என் தேவை ஓர்நாள் பூர்த்தியாகும்! என்று உறுதியாய் கூறினேன். அதனால் தான் "என்னுடைய தேவை எது? எவர் நிர்ணயிப்பது??" என்று என்னால் எழுதமுடிந்தது. சரி "பூர்த்தி ஆகவில்லை என்றால்?!" என்ற கேள்வி வந்தது; அப்படியெனில், பொது-வாழ்வில் ஈடுபடமாட்டேன் என்று கூறினேன். என் பதில் திருப்தியளிக்கவில்லை எனினும், என்மேல் உள்ள அன்பால்; அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது என் நட்பு-வட்டம். பின் "சரி! உன்னுடைய கொள்கை என்ன?"...

        என்றாவது சொல்! என கேட்டது. அதற்கும், நான் எந்த பதிலும் சொல்லவில்லை. நான் எப்போது, பொது-வாழ்வில் என்னை இணைத்துக்கொள்ளப் போகிறேன் என்பதே முடிவாகாத போது; கொள்கையை, எப்படி தீர்க்கமாய் சொல்ல முடியும்?! மேலும், என்னளவில், கொள்கை காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது; மாறவேண்டியது! உதாரணத்திற்கு, ஒரு காலக்கட்டத்தில் "பார்ப்பனியம்" என்ற கோட்பாட்டை; அதைக் கடைப்பிடித்தவர்களை எதிர்க்கவேண்டிய சூழல் இருந்தது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதுபோல், இன்றைய சூழலில் அது தேவையில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், சில கட்சிகள் இன்னமும் அந்த எதிர்ப்பை மாற்றாமல் இருப்பது தவறென்று "பகுத்தறிவுக்கும்"; "பார்ப்பனர்-எதிர்ப்புக்கும் மற்றும் கடவுள்-மறுப்புக்கும்" என்ன தொடர்பு???" என்ற தலையங்கத்தில் பதிந்திருந்தேன். இப்படி விளக்கினால், ஏற்பார்களா?! என்றோர் தயக்கம். பின்னர்...
  • மக்களின் வாழ்வாதார உயர்வு
  • மக்களின் பாதுகாப்பு
  • மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுதல்
         என பொதுவாய் சொல்லலாமா? என்று யோசித்தேன். இவைதான் எல்லா கொள்கைகளுக்கும் அடிப்படை என்பது நிதர்சனமே ஆயினும்; அப்படி சொன்னால், அது அவர்களை கேலி-செய்வது போல் ஆகிவிடக்கூடும்! என்ற அச்சத்தால் "கொள்கைகள்-நம் செயலில் இருந்து துவங்கவேண்டும்!" என்றேன். எந்த அளவிற்கு புரிந்துகொள்ளப்பட்டது?! என்று தெரியவில்லை. அதை இப்படி - விளக்கும் வகையில் நேற்றொரு சம்பவம் நடந்தது: எங்கள் ஊர் பஞ்சாயத்தில் ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவர் அரசு கொடுக்கும் 2.2 இலட்சம் உரூபாயை எனக்கு கிடைக்கும் யோசனையை சொன்னார்; அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கையூட்டாய் கொடுத்தால் போதும் என்றார். நான் நினைத்திருந்தால், அதைப் பெற்றிருக்க முடியும். நான் "இல்லையப்பா! அது தேவையான ஒருவருக்கு சென்று சேரவேண்டும்! அதை நான் அபகரிக்க விரும்பவில்லை!!" என்று மறுத்துவிட்டேன். தொடர்ந்து "பயப்படவேண்டாம்! எந்த சிக்கலும் வராது!"...

        என்று சொன்னார்.  நான் மீண்டும் மறுத்துவிட்டு "இல்லையப்பா! பயம் இல்லை; நான், சுய ஒழுக்கமும்/மனித-நேயமும் முக்கியம்!" என்று தொடர்ந்து எழுதி வருபவன். மேலும், திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுதும் ஒரு புண்ணிய-வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன். இப்படி கையூட்டு கொடுத்து அடுத்தவர் நலனை, நான் பரித்துக்கொண்டால், எழுதும் அருகதையையே நான் இழபேன்; எனவே, எனக்கு அதில் உடன்பாடில்லை! வேறெவரேனும் பெற்றுக்கொள்ளட்டும்!! என்று தீர்க்கமாய் மறுத்துவிட்டேன். நான் கடைப்பிடிக்காத ஒன்றை இதுவரை என் எழுத்தில் சொல்லியதே இல்லை! இனியும் சொல்லப்போவதில்லை! என் எழுத்துப்பணிக்கென்று சில நியதிகளை வகுத்துள்ளேன். என் நியதிகள் "முதலில், எனக்காக வகுக்கப்பட்டவை!"; எதற்காகவும் அதைத் தளர்த்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதுபோல் தான், பொது-வாழ்வுக்கென நான் சில கொள்கைகள் வகுத்துள்ளேன். அந்த கொள்கைள் என் செயலில்/நடைமுறையில்...

    இருந்து துவங்கியவை; அப்படித்தான், துவங்கவேண்டும்! என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.  மேலும், என் பொது-வாழ்வை துவங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை முதலில் "என் கிராமத்தில் இருந்தே, துவங்குவேன்!". இந்த 2.2 இலட்ச உரூபாய்க்காக என்-கொள்கையை இழந்தால், அதில் என் கிராமத்தின் ஒருவரை பின்தள்ளி, பொது-வாழ்வில் நுழையும் அருகதையை நான் இழந்துவிடுவேன்.  அதே நேரம், இதை மட்டும் நான் என்னுடையத் தகுதியாக நினைத்து; இன்றே பொது-வாழ்வில் ஈடுபடும் எண்ணமும் எனக்கில்லை. இது ஒரேயொரு சம்பவம்; இது போன்று மீண்டும்/மீண்டும் சோதனைகள் வரும். இன்று பெரியதாய் தோன்றாத இந்த பணம் நாளை பெரியதாய் தோன்றலாம். அப்படி ஒரு சூழல் வந்து, நான் என் கொள்கையை இழந்தாலும்; இதே நிலைதான். அல்லது 22 இலட்ச உரூபாய் கிடைத்தால், என் மனம் மாறக் கூடும்; நானும், மனிதன் தானே?! எனவே, அப்படிப்பட்ட சூழலே வரக்கூடாது என்பதற்காகத்தான் என் சொந்த...

    தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு; பொது-வாழ்வில் ஈடுபடவேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறேன்.  என் நண்பர்கள் வாதிட்டது போல், என் சொந்த தேவை பூர்த்தியாகும் போது; என் வாழ்வே முடிந்து விடவும் கூடும். என் இலக்கை அடைந்து பொது வாழ்வில் ஈடுபடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று திடமாய் நம்புகிறேன் (இன்-ஷா அல்லாஹ்). "இத்தலையங்கத்தைப் படிப்போர், எனக்கு உறுதுணையாய் வருவர்!" என்ற எதிர்பார்ப்பு இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அது மட்டும் நோக்கம் அல்ல! நான் பொது-வாழ்விற்கு வராமல் போனாலும், இதுபோன்ற கொள்கைகள் வேறு சிலரையாவது சென்று சேரவேண்டும் என்பதே தலையாய நோக்கம்.   இதை எவரேனும் படித்து - இப்போதே, அந்த வாய்ப்பை பெற்றிருப்போர்க்கு - எடுத்துரைத்தாலும் சந்தோசமே! மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும்! என்பதே உண்மையான விருப்பமாய் இருக்கும் பட்சத்தில், அதை எவர் செய்கிறார்கள் என்பது முக்கியமேயில்லை. செய்வது எவராயினும்...

நம்முடைய கொள்கைகள்; நம் செயலில் இருந்தே துவங்கவேண்டும்!!!

பின்குறிப்பு: அட...அட...அட...! என்னவொரு அதிசயம்?! தலையங்கத்தை எழுதி முடித்துவிட்டு; வழக்கம்போல், "தலைப்பை ஒட்டிய" கருத்துப்-படத்தை தேடிக்கொண்டிருந்த போது; சற்றும் எதிர்பாராத விதமாய் "என்னுடைய நிலைப்பாட்டை ஒட்டிய" ஒரு கருத்துப்படத்தைப் பார்த்து இன்ப-அதிர்ச்சி அடைந்தேன்! என்னுடைய முடிவில் துளியளவும் தவறில்லை!! என்பதை எனக்கே அழுத்தமாய் சொல்வதாக அமைந்தது இந்த கருத்துப்படம். 

தும்மலில் ஓர் ஒழுக்கம்...



       மேலுள்ள வாசகத்தை நண்பனொருவன் வாட்ஸ்-ஆப்பில் பகிர்ந்தான். அதனைப்பாராட்டி விட்டு, நான் எனக்குள்ள புரிதலை கீழ்வருமாறு விளக்கினேன்: ஆம்! ஒருவர் தும்மும்போது அவரின் முகத்தை "கைகளால் மறைத்து" தும்மும் வழக்கத்தை, நான் முதன்முதலில் போர்ச்சுக்கல் நாட்டில் தான் பார்த்தேன். அந்த வழக்கம் எனக்கு பிடித்திருந்தது; ஏனெனில், நானோ அல்லது மற்றவரோ தும்மும்போது - தெறிக்கும் எச்சிலால் - முகம்-சுழிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே, மற்றவருக்கு இடையூறாக இல்லாத வண்ணம் "வாய்/மூக்கு" போன்ற உறுப்புகளை மறைத்து தும்மும் வழக்கம் எனக்கு, ஓர் ஒழுக்காமாகத் தெரிந்தது. அன்று முதல் இந்தப் பழக்கத்தை நானும் தொடர்ந்து வருகிறேன் - இன்றுவரைக் கூட அப்படியே செய்கிறேன்.  

           அது போல், நம் தும்மலால் எழுந்த சத்தம் அல்லது நம் மறைப்பையும் மீறி அடுத்தவர்கள் மேல் எச்சில் ஏதேனும் தெறித்திருக்குமோ என்ற ஐயம் - இவை போன்றவற்றின் அடிப்படையில்; போர்ச்சுக்கல் நாட்டு மக்கள் - தம் அருகில் இருப்போரிடம் "மன்னிக்க!" என்று கோருவர்.  அதுவும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும், நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன். இதுதான், நான் அங்கே பகிர்ந்த என் புரிதல். எனவே, நான் தும்மும்போது சம்பந்தப்பட்ட உறுப்புகளை மூடிக்கொண்டு; தும்மிவிட்டு தன்னிச்சையாக "Sorry" என்று சொல்வதுண்டு. வேண்டுமானால், நான் அடுத்தமுறை தும்மும்போது - நீங்கள் அருகில் இருந்தால்; இதைச் சரிசெய்து பாருங்களேன்.  நல்ல விசயங்கள் எங்கிருந்து வந்தாலும்; ஏற்பது என் வழக்கம்! அப்போ நீங்க...?!

உங்களுக்கும் இது பிடித்திருந்தால்; இக்கணம் முதல், கடைபிடியுங்களேன்!!!

ஞாயிறு, அக்டோபர் 18, 2015

குறள் எண்: 0077 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0077}

என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்

விழியப்பன் விளக்கம்: எலும்பில்லாத உயிர்களை, சூரியனின் வெப்பம் சுட்டெரிப்பது போல்; அன்பில்லாத பிறவிகளை, அறம் உழற்றும்.
(அது போல்...)
பொன்னான நேரத்தை, செயல்வடிவற்ற பேச்சுகள் வீனடிப்பது போல்; முறையற்ற அரசு, மக்களை வருத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

உணவு எப்போது அபத்தமாகிறது???



             1990-களின் மத்தியில் எழுத்துச் சித்தர். பாலகுமாரன் அவர்களின் ஒரு கட்டுரைத் தொகுப்பு என்னில் பல மாற்றங்களை உண்டாக்கியது. மிகக் குறிப்பாய் "உணவை"ப் பற்றிய கட்டுரை எனக்குள் பெருத்த அழுத்தத்தை உண்டாக்கியது. அதில் "காலை உணவருந்திக்கொண்டு இருக்கும்போதே; மதிய உணவு என்னவென்று விவாதிப்பது - அபத்தம்!" என்ற அர்த்தத்தில் ஓர் சொற்றொடர் இருக்கும். அந்த கட்டுரை மட்டுமல்ல; உணவைப் பற்றி, பல புரிதல்களை என் வீட்டிலேயே விதைத்தவர் உண்டு; "என் தமிழுக்கு(ம்) வித்திட்ட" என்னப்பனே அவர். இன்றுவரை - சாப்பாட்டில் எந்தக் குறை இருந்தாலும், வெளியே சொல்வதில்லை அவர்; அவருக்கும் சமைக்கத் தெரியும் என்பதால் கூட இருக்கலாம். அடுத்த வேளைக்கு என்ன உணவு வேண்டும்?! என்று கேட்டால் கூட "எதுவாயினும் பரவாயில்லை!" என்பார்; வெறும் சொல்லிலல்ல! உண்மையில், எந்த வகை உணவானாலும் ஏதும் சொல்லாது சாப்பிடுவார். அவரின் அந்த செயல்...

     என்னை ஆச்சர்யப்படுத்தும். இப்படி "என் தமிழுக்கும்; என் எழுத்திற்கும் வித்திட்ட" இவ்விருவரும் உணவு பற்றியும் என்னுள் பெருத்த புரிதலை உண்டாக்கினர். இன்றும் கூட என்னவளோ/என்-தமக்கையோ/என்-தாயோ/அல்லது வேறெவரோ" அடுத்த வேளைக்கு என்ன வேண்டும்? என்று கேட்டால் "எதுவாயினும்!" என்றே சொல்வேன்; தொடர்ந்து வற்புறுத்தினால் "இட்லி/தோசை" போன்று எளிதில் பலருக்கும் செய்யக்கூடிய உணவையே பரிந்துரைப்பேன். கடந்த 11 ஆண்டுகளாய் நானும் சமையல் செய்கிறேன்; நம் உணவு மட்டுமல்ல - வெளிநாட்டு உணவு வகைகள் கூட சமைப்பேன்; இதுபற்றி கூட முன்னரே பதிந்திருக்கிறேன். இப்படி, மேற்குறிப்பிட்ட இருவர் மட்டுமல்லாது; என் சமையல் கலையும் - உணவைப் பற்றி எனக்கு பல புரிதல்களைக் கொடுத்திருக்கிறது. உணவு பற்றி நான் பெரியதாய் அலட்டிக்கொள்வதில்லை! நாம் உயிர் வாழ்வதற்கு உணவும் ஓர் அத்தியாவசியம்; மறுக்கவில்லை! ஆனால், ஒருவேளை...

      சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்தவேளை சாப்பாடு பற்றி பேசுவதையே நான் "அபத்தமாய்" பார்க்கிறேன். என்னவள் என்னுடன் இருந்தபோது; ஒவ்வொரு வேளைக்கும், இன்ன உணவு என்று ஒருவாரத்திற்கு முன்பே கூட நாங்கள் பட்டியலிட்டதுண்டு. ஆனால், அது நாங்கள் இருவரும் பணியில் இருந்ததால்; முற்கூட்டியே திட்டமிடுவதற்காக செய்தது. மேலும், யார் என்ன சமைப்பது? என்பதையும் முன்பே வகுத்து விடுவோம். எனவே, ஒருவர் உணவு சமைக்கும்போது - மற்றவர் பிற வீட்டு-வேலை அல்லது எம்-மகளுக்கு தேவையானதை செய்வது என  திட்டமிடுவோம். மற்றபடி, இந்த உணவுதான் வேண்டும் என்ற ஆவலோ அல்லது சுவையின் மீதான ஆசையோ அல்ல! எனவே, தம்பதியர் இருவரில் ஒருவர் வீட்டில் இருக்கும் பட்சத்தில்; "இன்னொருவர் சமையலில் வேலையைப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில்" இப்படிப்பட்ட கேள்விகள் அபத்தம் என்பது என் பார்வை. இவை எல்லாவற்றையும் தாண்டி,  சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட...

          சிந்தனை ஒன்று; இந்த உலகத்தின் ஆகச்சிறந்த உணவேயாயினும் "உண்டது தொண்டை தாண்டிடின்" அது வெறும் சக்கை". ஒருவர் வாயில் நுழைந்தபின்; அவசரத்துக்கு அவர் கையாலே எடுத்தாலும்; அதைப் பின்னர் உண்ண தயங்குவர். அதுதான், உணவு; இதற்கேன் இத்தனை ஆர்ப்பாட்டம்? இது அபத்தம் அல்லவா? என்று என்னுள் அடிக்கடி தோன்றும். இதைக்கூட ஒரு கவிதையில் ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அடுத்த வேளை உணவைப் பற்றி; தேவையில்லாமல் பேசுவதையே அபத்தம் என்று நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்கு "தாம் சாப்பிடும் உணவைப் புகைப்படம் எடுத்து; பகிரும்" சமூக வலைதளங்களைப் பார்த்தால் எத்தனை ஆற்றாமை எழும்?  முகநூலைக் கூட என்னால், எளிதில் கடந்து வர முடிகிறது. என் வாட்ஸ் ஆப் குழுவில் அடிக்கடி இப்படிப் புகைப்படங்களை பகிரப்படும் போது; என்னுடைய ஆற்றாமை அளவுகடந்து செல்கிறது; இதைப் பலமுறை கடிந்திருக்கிறேன். இப்போது, பெருமளவில் குறைந்திருக்கிறது.

       ஒருவேளை, புரட்டாசி காரணமா?! என்று தெரியவில்லை. புரட்டாசி முடிந்ததும், புற்றீசல் போல் கிளம்புமோ? பார்ப்போம்... என்ன நடக்கிறதென்று! எப்போதேனும், விழாக்காலம் போன்ற தினங்களில் சமைத்த/உண்ட "சிறப்பு" உணவைப் பகிரலாம், தவறில்லை. அல்லது, சமையலில் நாம் செய்த மாற்றத்தை; புதுமையான உணவு-வகையைப் பகிரலாம்; நானும் அப்படி செய்திருக்கிறேன். அதுபோல், இப்படிப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் அபத்தத்தை விட - நண்பர்கள் ஏதோ பேசி இருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில் வாட்ஸ்-ஆப்பைத் திறந்து பார்த்து; உணவுப்-புகைப்படம் என்று தெரிந்ததும் ஒரு ஆற்றாமை வரும் பாருங்கள்! அதை சொல்லில் விவரிக்கவே முடியாது. எனக்கிருக்கும் ஒரேயொரு கேள்வி இதுதான்: இப்படி புகைப்படங்கள் அனுப்ப என்ன காரணம்? தொடர்ந்து யோசித்ததில், எனக்கு பின்வரும் காரணங்கள் இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது:
  • இது போன்ற சமையலை எவரும் சமைக்க முடியாது; அதனால் பகிர்கிறோம்
  • நிறைய பேர் சமைப்பதே இல்லை; அதனால் பகிர்கிறோம்
  • வகை/வகையாய் செய்து உண்கிறோம்; எவரும் இப்படி சமைப்பதில்லை
  • இதோ உணவு; வாருங்கள், உண்ணலாம்! என்ற அழைப்பு
        இப்படித்தான் என்னால் யூகிக்க முடிகிறது; ஆனால், இதில் எதுவும் உண்மையல்ல! இப்படி அனுப்புபவர்களில் ஒரு நண்பனின் அம்மாவின் சமையல் - எனக்கு(ம்) அமிர்தம் போன்றது. குறிப்பாய், ஞாயிறு மதியம் "அரிசி கலந்த களியும்; கறிக்குழம்பும்" செய்வார்; அப்படியொரு அருமை! அவனுக்கு(ம்), என் தமக்கை செய்யும் உணவு பிடிக்கும். இதுபோல், ஒவ்வொருவருக்கும் பல அபிமானங்கள் இருக்கும். எனவே, வேறெவரும் சமைக்க முடியாது! என்ற எண்ணத்தில் இவர்கள் பகிரவில்லை. "புகைப்படத்தில் இருக்கும் உணவை" உண்ணமுடியாது என்பதால், அழைப்பும் அல்ல! அக்டோபர் 3-ஆம் தேதி மதியம் நான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தேன்; 4-ஆம் தேதி இரவு முதல் 18-ஆம் தேதி (இன்று) வரை என் தினசரி உணவு கீழ்வருவதே: வடிக்கும் சோற்றை மூன்றாகப் பிரித்து; 1. ஒரு பிரிவுக்கு என் தமக்கை அரைத்த பருப்புபொடி, 2. இன்னொன்றுக்கு என் தமக்கை செய்து கொடுத்த இஞ்சிக் குழம்பு,

       3. இறுதியாய், இங்கே வாங்கிய தயிர். இந்த நாட்களுக்கு இடையில் என் நண்பன் வீட்டு பிரியாணி இரண்டு வேளை; ஒருவேளை உணவகத்தில்; மற்ற வேலைகள் அனைத்தும் ஒமேற்குறிப்பிட்ட உணவே! கடந்த 5 வருடங்களாய் - பெரும்பான்மையில், காலையில் "பாலில் ஊற வைத்த, சோளத்தட்டைகள் (காரன்-ஃப்ளேக்ஸ்)" தான். 15/20 பேர்களுக்கு கூட வகை வகையாய் சமைத்திருக்கிறேன். இப்படி எளிமையாய் தான் உண்ணவேண்டும்; விதவிதமாய் உண்ணக்கூடாது என்பதல்ல! என் வாதம். காரணமின்றி, நீங்கள் சாப்பிடுவதை மற்றவர்களுக்கு புகைப்படமாய் அனுப்பவேண்டாம் என்பதே என் வேண்டுகோள். வேடிக்கை என்னவென்றால், பலரும் அதற்கு பதிலாய், வேறு புகைப்படங்களே அனுப்புவர்; நான் இதை தவறென்று சுருக்கமாய் சுட்டிக்காடுவேன். ஆனால், உணவைப் பற்றிய என் புரிதல்களை இங்கேயாவது பதியவேண்டும் என்று தோன்றியது. மீண்டும் சொல்கிறேன்; தொண்டையை தாண்டிவிட்டால்...

உயர்தர அமிர்தமே ஆயினும் - அது வெறும் சக்கை! 
எனவே, அதற்கு இப்படியோர் முக்கியத்துவம் கொடுப்பது அபத்தம்!!  

பின்குறிப்பு: இதுவரை செய்ததில்லை; இனியும், செயப்போவது இல்லை! ஆனால், கீழ்வருவது போல் அடிக்கடி தோன்றும்: இது, நான் நேற்று சாப்பிட்ட உணவு! என்று "ஒன்றை"ப் புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும் என்று தோன்றும். ஆனால், அவர்களைக் காயப்படுத்துவது என் நோக்கமல்ல! இப்படி உணவைப் பற்றி புகைப்படங்கள் எடுத்தனுப்பி - பேசுவதற்கு வேறொன்றும் இல்லை என்பதாய்; ஒரு குழுவில் பரிமாற்றங்கள் நடைபெறுவது, அபத்தத்தின் உச்சமாய் எனக்கு தோன்றும். அவரவர்களுக்கு எப்படி தோன்றுகிறதோ; அப்படியே தொடரட்டும்! இப்போதெல்லாம், அந்தப் புகைப்படங்களை நான் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை! ஆனால், இப்படியோர் பதிவை; பதியவேண்டும் என்பதை என் கடமையாக உணர்கிறேன்.    

சனி, அக்டோபர் 17, 2015

குறள் எண்: 0076 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0076}

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை

விழியப்பன் விளக்கம்: அறம்சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே, அன்பு துணையிருக்கும் என்போர்; வீரச்செயல்களுக்கும், அதுவே துணையாகும் என்பதை அறியாதவராவர்.
(அது போல்...)
பொருளாதாரத் தேவைகளுக்கு மட்டுமே, தந்தை உதவுவார் என்போர்; குழந்தை-வளர்ப்பிலும், "தந்தையானவன் தாயுமானவன்" என்பதை உணராதவராவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, அக்டோபர் 16, 2015

குறள் எண்: 0075 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0075}

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

விழியப்பன் விளக்கம்: இவ்வுலகில், இன்பமாய் வாழ்பவர்களின் சிறப்பானது; அவர்களின் அன்புள்ளம் நிறைந்த வாழ்க்கையால் விளைந்த பயனாகும்.
(அது போல்...)
சமூகத்தில், மதிப்புடன் வாழ்பவர்களின் புகழானது; அவர்களின் அறநெறித் தவறாத பயணத்துக்குக் கிடைத்த வெகுமதியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், அக்டோபர் 15, 2015

எல்லாமும் மனசாட்சிக்கு பின்னே!!!


எந்த தெய்வமும்...
நின்று(ம்) கொன்றதில்லை
என்றும் கொன்றதில்லை!

ஆனால்...
மனசாட்சி கொல்லமறந்த
கணமேதும் இருப்பதில்லை!!

மனசாட்சியே மனிதனின்
"மதம்/கடவுள்/சாதி"
மற்றெல்லாம்...
மனசாட்சிக்கு பின்னே!!!

நண்பென்னும் நாடாச் சிறப்பு (குறள் எண்: 0074)



     குறள் எண் 0074-இற்கான என் விளக்கத்தைப் படித்திருப்பீர்கள். அன்புடைமை எனும் அதிகாரத்தில் உள்ள ஆழ்ந்த கருத்துகளை; அதைச் சரியாய் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்களை முன்பே எழுதி இருக்கிறேன். அந்த வகையில், இந்த குறளில் "நண்பென்னும் நாடாச் சிறப்பு" என்கிறார் நம் பெருந்தகை. என்ன இது... நட்பெனும் சிறப்பை எவரும் நாட/தேட மாட்டார்கள் என்றாகிறதே?! பெருந்தகை ஏன் அப்படி கூறவேண்டும்? நட்பைப் பற்றி (பின்வரும் அதிகாரங்களில்)அவர் சொல்லாத சிறப்பம்சங்களா? என பல்வேறு கேள்விக்கணைகள் என்னுள் எழுந்தன. இல்லை, பெருந்தகை அந்தப் பொருளில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை! நட்பென்பது மிக ஆழமானது; அதை பாதுகாப்பது பெரும் சிரமமானது என்ற பொருளில் தான் சொல்லி இருக்கவேண்டும், என்று திடமாய் நம்பினேன். இருபினும், மற்றவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, கீழ்வருவன கிடைத்தன:
  • நட்பு என்று சொல்லப்படும் தேடாத சிறப்பு
  • நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பு
  • நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பு
  • நட்பு என்று சொல்லப்படும் எய்துதற்கரிய சிறப்பு
  • நட்பு எனும் பெருஞ்சிறப்பு
  • அனைவரையும் நட்பாக்கும் சிறப்பு
           என்பனவை நான் கண்ட விளக்கவுரைகள். இவற்றைப் படித்த பின்னரும், இல்லை; இதுவல்ல பொருள்! என்ற நம்பிக்கை மேலும் தொடர்ந்ததோடு; நான் நினைத்த பொருளே சரியென்று திடமாய் நம்பினேன். நான் கொண்ட பொருள் இதுதான்: மேலோட்டமாய் பார்க்கும்போது, நட்பு என்பது சாதாரண விசயமாய் தெரியலாம்; அதிலும், இந்த சமூக வலைத்தளங்கள் வந்த பின் நட்பு எனும் சொல்லின் பொருளே நீர்த்து போவதாய் நான் உணர்ந்ததுண்டு. ஆனால், உயர்ந்த-நட்பெனும் உறவை,  தொடர்ந்து சிறிதும் மனக்கசப்பின்றி, நீண்ட நாட்கள் தொடர்வது என்பது அத்தனை சாத்தியம் இல்லை. எனவே, அப்படிப்பட்ட சிரமமான ஒரு உறவை நாடிச்செல்ல எவரும் எளிதில் விரும்புவதில்லை. மேலோட்டமாய் நட்பென்று கொள்வது வேறு! ஆனால், உண்மையான/ஆழமான நட்பாய்; நம் ஆத்மாவோடு கலந்திட்ட ஒன்றாய் நினைத்து ஏற்பதை; அதை நாடிசெல்வதை எவரும் விரும்பமாட்டார்கள். இதுதான், நான் உணர்ந்த பொருள்.

        நட்பு பற்றிய, என் பெருத்த சிந்தனைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன்! அந்த வகையில், என் மிக-நெருங்கிய நட்பைப் பற்றி அடிக்கடி இங்கே குறிப்பிடுவதுண்டு. எங்கள் நட்பின் பலத்தை - எங்கள் சுற்றமும் நன்கறியும்! அது ஒரு கொடுப்பினை; ஆம், சிறந்த நட்பென்பது ஒரு கொடுப்பினை - அது தேடி அடையமுடியாதது; அது நம்மை, தானே நாடி வந்து சேர்வது/அமைவது! எங்கள் நட்பை "நட்பின் வலிமை..." என்றோர் புதுக்கவிதையாய் எழுதியிருக்கிறேன்! {குறிப்பு: வழக்கமாய், ஒரு பதிவுக்கு சார்புடைய என் பிற பதிவுகளை,  இணைப்புகளாய் கொடுப்பேன். இணையத்தில், இது பொதுவானது எனினும் - மேலுள்ள சில வரிகளுக்கு இடையில் இருக்கும் பதிவுகளைப் படிக்கும்படி வற்புறுத்துகிறேன். நட்பு பற்றிய புரிதலை அது விசாலமாக்கும் என்று  நம்புகிறேன். நன்றி!} நட்பு பற்றிய என் சிந்தனைகளுடன், இந்த சொற்றொடரின் "சிந்தனைத் தூண்டலும்" இணைந்ததால், என்னுடைய விளக்கவுரையில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறேன்:

... தேடி-அடையமுடியா; உயரிய-நட்பெனும் சிறப்பையும் கொடுக்கும்!!!

குறள் எண்: 0074 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0074}

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

விழியப்பன் விளக்கம்: அன்பு, ஒருவரை அன்புடையவராய் இருக்கச்செய்யும்; மேலும், எளிதில் அடையமுடியாத - நட்பெனும் சிறப்பையும் கொடுக்கும்.
(அது போல்...)
உண்மை, ஒருவரை அறத்தைத் தழுவச்செய்யும்; மேலும், என்றும் அழிந்திடாத - "மகாத்மா"வெனும் உன்னதத்தையும் அளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

நாட்டுப்பற்று... எல்லோருக்கும்/எல்லாவற்றிலும் இருக்கவேண்டும்!!!


{நமக்கிருக்கும் சுதந்திரம் தான் - நம் முதல் எதிரியோ???!!!}

*******

        நேற்றிரவு வாட்ஸ்-ஆப் குழுவொன்றில் சப்பான் நாட்டுக்காரர்களைப் பற்றிய ஒரு பகிர்வைப் பார்த்துவிட்டு; நட்பொன்று "சப்பான்காரனுக்கு OK. அவன் நெஜமா உழச்சிட்டு சோர்வுக்குக் கொஞ்சம் கண்ணசறுவான். நம்மாளுக உண்ட மயக்கத்துல இல்ல தூங்குவான்" என்று கருத்திட்டது! அது எனக்கு மிகப்பெரிய ஆற்றாமையைத் தந்தது; மிகச்-சுருக்கமாய், அதைத் தவறென்று சுட்டிக்காட்டிவிட்டு - மேற்கொண்டு வாதமேதும் அங்கே செய்யவில்லை! வழக்கமாய், சிறிது வாதம் எழும்; நேற்று, அதைக்கூட தவிர்த்துவிட்டேன். இதுபோல், பலவற்றிற்கும் நான் வாதம் செய்வதால் "என்னுடைய பார்வை; அவர்களுக்கு அறிவுரை கூறுவதாய் பார்க்கப்படுகிறது - அது அ"ற"வுரை என்று பலமுறைக் கூறிய பின்னரும் கூட!". எனவே, இப்போதெல்லாம், எந்த விசயத்திற்காகவும் எந்த குழுவிலும் "பெருத்த அளவில்" வாதம் செய்வதில்லை. எனக்கென ஒரு "வெளி" - இங்கே இருக்கிறது; இங்கே என் பார்வையைப் பகிர்ந்துவிட்டு...

        அவர்களுக்கும் இணைப்பைக் கொடுத்துவிட்டு அமைதியாய் இருக்கப் பழகி வருகிறேன். என் பார்வையை அங்கே வாதம் செய்து - ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்த விரும்பவில்லை. இப்படியோர் தலையங்கத்தை எழுத; மேற்கூறிய என் நட்பின் கருத்து மட்டும் காரணமல்ல! மேலும், இதுபற்றி முன்னரே கூட சுருக்கமாய் விளக்கி இருக்கிறேன் - ஆம்! விஜயகாந்த் எனும் தனிமனிதரைத் தூற்றுவதைப் பற்றிய என் பார்வையில் "நம் இந்திய சமூகத்தின் ஒரு குறிப்பிட இனத்தவர்" பற்றி நகைச்சுவை என்ற பெயரில் "கீழ்த்தரமாய் பேசுவதைக்" குறிப்பிட்டிருக்கிறேன். அதே தான், இதற்கும் அடிப்படை!
  • தமிழர்கள் என்றால் ஒற்றுமை இல்லாதவர்கள்
  • சிங் என்றால் அறிவில் குறைந்தவர்கள்
  • இந்தியர்கள் என்றாலே முட்டாள் தனமாவர்கள்
  • படித்தவர்கள் அரசியல், என்று எது பேசினாலும் - அது பாமரர்களுக்காகத்தான்
  • வேற்று மொழி பேசும் சிலர் என்றாலே - அவர்கள் ஒருவிதமானவர்கள்
          இப்படி பல தவறான "பொதுப்பார்வைகள்" இருக்கின்றன. ஒருமுறை, விண்வெளிக்கலம் பற்றி "இந்தியர்களை கீழ்த்தரமாய்" விமர்சிக்கும் ஒரு நகைச்சுவையை முகநூலில் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவரிடம் "செவ்வாய்க்கே விண்கலம்" அனுப்பியவர் நம்மவர்கள்; அவர்களையா இப்படிக் கேளிக்கை செய்கிறீர்? என்று கேட்டேன். அப்போதும் அதை உணராத 65 வயது மதிக்கத்தக்க அந்த பெரிய-மனிதர் "உங்களுக்கும் என் சுவற்றுக்கும்(wall) சம்பந்தமில்லை; இங்கே வராதீர்கள்!" என்று பதில் சொன்னார். நானும் "என் நட்பொருவரின் கருத்து தான், என்னை இங்கே அழைத்துவந்து விட்டது; இல்லையேல், நான் பின்தொடர, நல்ல சுவர்கள் பலவுள்ளன!" என்று காட்டமாய் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து விலகிவிட்டேன். இப்படி "நம்-இனத்தை/நம் நாட்டை/நம் நாட்டவரை" தவறாய் சித்தரிப்பதே தவறெனும் போது; அதை ஒருவர் தவறென்று சுட்டிக்காட்டும்போது - அதை உணராமல், நியாயப்படுத்தும் போக்கு...

    என்னை மேலும் பாதிக்கிறது. "நம்-இனத்தை/நம் நாட்டை/நம் நாட்டவரை" தவறாய் சித்தரிப்பது, தவறென்றால்... அதை எவர்/எந்த அடிப்படையில் செய்தாலும் தவறுதான்! அதில், நியாயப்படுத்த ஏதுமில்லை! என்பதே என் அணுகுமுறை. மேற்குறிப்பிட்ட கருத்து "அவர்களையும்/என்னையும் உள்ளடக்கியதாகத்தான் நான் பார்க்கிறேன்!" அவர்களிடம் "அப்போ... நீங்க மட்டும் என்னவாம்?! என்று கேளுங்கள் "நான் அப்படியில்லை... அவர்கள் வேறு!" என்று பதில் வரும். அந்த வேறொருவர் எவர் என்பது அவர்களுக்கும் தெரியாது; அப்படியே, இவர்களாகத்தான் இருக்கும் என்றெண்ணி ஒருவரை கேளுங்கள் "நான் அவன் இல்லை!" என்று பதில் வரும். பின், அப்படிப்பட்டவர் எவருமே இல்லை, என்றாகிறதல்லவா?! பின்னெப்படி, அப்படியோர் கூற்று வருகிறது? இதில், இன்னுமோர் வேடிக்கை உண்டு: "ஒரு மதத்தை; கேளி செய்யும் சிலரைப் பார்த்து - பலரும், ஏன், மற்ற மதத்தைக் கேளி செய்யுங்களேன்!" 

         என்று கொக்கரிப்பார்கள்! மதத்தைப் பற்றி ஒருவர் கேளிக்கை செய்யும்போது, கொதிக்கும் நாம்; ஏன், நம் நாட்டைப் பற்றி பலரும் இப்படி தரக்குறைவாய் பேசும்போது மெளனிக்கிறோம்? நாட்டின் மேலே இல்லாத பற்று; மதத்தின் மேல் (மட்டும்)எப்படி வருகிறது?! சில நாடுகளை நேரில் சென்று பார்த்தவன் என்ற அடிப்படையிலும், பல நாட்டவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றதன் அடிப்படையிலும் - கீழ்க்கண்டவைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:
  • பல நாடுகளில் - இப்படி, நம் நாட்டைப் பற்றி நாமே விமர்சித்தாலும்; கடுமையான தண்டனைக்கு ஆளாவோம்! - என்பது தெரியுமா?! நமக்கு கிடைத்திருக்கும் இந்த "பேச்சு சுதந்திரம்" நம் நாட்டைப் பற்றி நல்ல விசயங்களை பேசி; நாட்டின் பெருமையை உ(ண/ய)ர்த்திடவே! நம் நாட்டில் உள்ள தவறைச் சுட்டிக்காட்டவேண்டாம் என்று சொல்லவில்லை! அது தவறான விசயங்களுக்காய் இருக்கவேண்டும்; அதிலும் "சிறிதேனும்" உண்மையும்/ஆக்கப்பூர்வமான சிந்தனையும் கலந்து இருக்கட்டும்!
  • எல்லோரும்/எல்லாவற்றிலும் முன்னேறிய நாடென்று - எந்த நாடும், உலகில் இல்லை! இனி... இருக்கப்போவதும் இல்லை! நம்மை விட பின்தங்கிய நாடுகள் - ஏராளம்! ஏராளம்!! அதனால், அந்த திருப்தியோடு இருப்போம் என்று கூறவில்லை!!! ஆனால், காரணமே இல்லாமல்; நம் நாட்டையும்/நாட்டவரையும் குறை கூறவேண்டாம், என்பதே என் வேண்டுகோள்.
  • "இந்தியாவில் இருக்கும் கலாச்சாரமும்/சுதந்திரமும்/வாழ்க்கை-வளமும்/வாழ்க்கை-முறையும் - இப்படி பலவும் - நமக்கு இல்லையே?!" என்று ஏங்கும் நாடுகள் ஏராளம்! ஏராளம்!! "சாதி/மதம்/இனம்" என்று பலவற்(றி/றா)ல் பிளவுபட்டிருப்பினும்; இன்னமும் நம் நாட்டைப்போல் ஒற்றுமை... உலகில் எங்குமே இல்லை! ஐரோப்பிய நாடுகளுக்கு ஏகப்பட்ட "எல்லைப் பிரச்சனைகள்!"; நமக்கிருப்பது - மிகச் சொற்பம்தான்!
  • இன்னமும்.... நம் நாடுகளில் "அம்மா! தாயே!!" என்று கெஞ்சி தான் பிச்சை எடுக்கின்றனர்! பல நாடுகளில் இருப்பதுபோல் "துப்பாக்கியைக் காட்டி" எனக்கொரு சிகரெட் கொடுக்கிறாயா?! இல்லை கொல்லட்டுமா?! என்று பிடுங்கும் துர்ப்பாக்கிய நிலை நமக்கு இன்னும் வரவில்லை. கொள்ளையடிப்பவன் வேறு; கொள்ளையில்லாத நாடென்று(ம்) உலகில் ஏதுமில்லை! ஆனால் "மிரட்டி பிச்சை எடுக்கும்" மனிதாபிமானம் அற்ற-நிலை - இன்னமும் நம் நாட்டில் வரவில்லை என்பதை நினைத்து; நாம் நெஞ்சுயர்த்த வேண்டாமா??!!
  • வேறொருவரின் காரில் இருக்கும் "ஒற்றை நாணயத்தை" எடுக்க; அந்த காரின் கண்ணாடியையே உடைக்கும் நிலை இன்னமும், நம் நாட்டில் வரவில்லை என்ற கர்வம் வேண்டாமா?! நமக்கு.
  • நாமே, இப்படி நாட்டுப்பற்று என்றால், என்னவென்று உணராமல் இருக்கும்போது; ஒரு அரசியல்வாதியைப் பார்த்து "உனக்கெல்லாம் நாட்டுப்பற்று இருக்கிறதா?!" என்று கேட்கும் தார்மீகத்தை இழக்கிறோம் என்பது என் புரிதல். மேலும், அரசியல்வாதி என்பவர் தனிப் பிறவியல்ல! அவர் நம்மில் ஒருவர்; நம்மிடம் இருக்கும் அதே சிந்தனை தான் அவர்களுக்கும் இருக்கும்! {உடனே, அவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்! அவர்கள் தான் செய்யவேண்டும் என்ற விதண்டாவாதம் வேண்டாம். அது, அவர்களின் பொறுப்பு என்பதில் எனக்கு(ம்) எந்த மாற்றுக் கருத்தில்லை! ஆனால், நாம் அரசியல்வாதியாய் வருவதை எவரும் தடை செய்யவில்லை; அவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு; வெறும் அதிர்ஷ்டம்(மட்டும்) அல்ல! சரியானவரோ/தவறானவரோ - அவர்களின் கடின உழைப்பை நாம் மறுப்பதற்கில்லை! எனவே, நாமே பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதை சாதிக்க முடியும்!!!}. இல்லையேல்... நம்மில் ஒருவர் தான் அவர்களும் என்பதை மறக்கவேண்டாம்!!!
  • என் வீட்டுக் குப்பையை அகற்றவேண்டும் என்கிற அறிவும்/அக்கறையும் இருக்கும் எனக்கு; அதைக் கொண்டுபோய் பொதுவிடத்தில் கொட்டக்கூடாது என்ற புரிதல் இல்லையெனில்... "என்னய்யா தேசம் இது?! குப்பையும்-கூளமுமாக இருக்கிறது?!" என்று கேட்கும் தார்மீகத்தை நான் இழக்கிறேன். இது நாம் ஒவ்வொருவரும் இணைந்து செய்யவேண்டிய கடமை.
          *******
  • "நிற-வெறி"யில் ஆரம்பித்து; சகிக்கமுடியாத அளவில் பிரச்சனைகளைக் கொண்ட நாடுகள் ஏராளம்! ஏராளம்! ஆனால், அவையெல்லாம் வெளியே தெரிவதில்லை; ஏனெனில் "Slum-dog Millioner" என்ற படத்தைப் பார்த்து - நம் நாட்டை இப்படி ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு காண்பித்திருக்கிரார்களே?! அதிலும், நம் நாட்டவரே படத்தை எடுத்து இருக்கிறார்களே?! - என்று அவர்கள் கொதித்தெழ தவறமாட்டார்கள்!!! அதனால் தான், அவர்கள் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளும் வெளியே தெரிவதில்லை. 
  • ஆனால், நம் நாட்டில் பத்திரிகை/பேச்சு சுதந்திரம் "என்ற மாயையில்" -  நம் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை எனினும் - உடனே! ஒரு பதிவிட்டு ஆர்ப்பரிக்கிறோம்! ஒரு ஐரோப்பியனோ/அமெரிக்கனோ - அவன் வீட்டு குழாயை அவனே சரிசெய்வான் - ஏனெனில், ஆட்களுக்கு கூலி என்பது அங்கே "இமாலய உயரம்"! நம் ஊரில், 5-க்கும் 10-க்கும் ஆட்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இடமும் நாம் பேரம் பேசுவோம்! மேலை நாட்டவர்களுக்கு சம்பளம் மட்டும் அதிகமில்லை; ஒவ்வொரு விசயத்துக்கும் - பணம் அதிகம் செலவாகும். எனவே, அவரவர் வீட்டு வேலையை; அவர்களே செய்து பழகுவர். 
  • ஆனால், நாமோ - கையில், அலைப்பேசியும்/இணையமும் இருந்தால் - எதை வேண்டுமானாலும் எழுதலாம்... என்ற தவறான புரிதலில் இருக்கிறோம். எனக்கு, எல்லாமே என் அரசே செய்யவேண்டும்! என்று ஆர்ப்பரிக்கிறோம். நம்முடைய கடமை என்பதே என்னவென்று; தெரியாத நிலையில் இருக்கிறோம். மேலை நாடுகள் - மேன்மை அடைந்தது; அவர்கள் ஆட்சியாளர்களால் தான் என்ற தவறான-புரிதலை உடைத்தெறிவோம்! அந்த நாடுகளின் வளர்ச்சியில் - ஒவ்வொரு தனி மனிதனின் "பெருத்த"பங்கு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் என்னுடைய நாடு! என்கிற உண்மையான நாட்டுப்பற்று இருக்கிறது.  
  • எனவே, நம் நாட்டைப் போல், எல்லா நாட்டிலும்; அவர்களுக்கென்று பல பிரச்சனைகள் இருக்கின்றன! அவற்றில் பலவும், நம் நாட்டில் அறவே இல்லை! ஆனால், நம்மைப் போன்று - தம் நாட்டை தாமே தூற்றும் நாட்டவர்கள் பெருமளவில் கொண்ட - ஒரு நாட்டை இதுவரை நான் கண்டதில்லை! இந்த உண்மையை நினைத்து நாம் முதலில் வெட்கப்படவேன்டாமா?
          *******

        - இப்படி பட்டியல் இட எண்ணற்றவை உள்ளன! வெளிநாடுகளில் நாம் கற்கவேண்டிய பல உள்ளன என்பதில், எனக்கு(ம்) எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! நானே, அவற்றை பகிர்ந்தும் இருக்கிறேன். ஆனால், அடிப்படையற்ற வகையில் நம் நாட்டையும்/நாட்டவரையும் குறை கூறவேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நம்மிடம் இருந்து, மற்ற நாடுகள் கற்கவும்; ஏராளம் உண்டு என்பதை நினைவுகூர்வோம். 

       "தமிழை யார் வளர்ப்பது? என்று எந்த நியதியும் இல்லை! இவர் தான் அல்லது இவர்கள் குடும்பம் தான் செய்ய வேண்டும் என்ற நியதியும் கூட இல்லை!! இது அவர்களின் கடமை மட்டுமல்ல, நம் எல்லோரின் கடமையும் கூட. முடிந்தால், தமிழை வளர்க்க நாமும் நம்மால் முயன்றதை செய்வோம்; அல்லையேல், அவ்வாறு செய்பவர்களை முடிந்தவரை ஊக்குவிப்போம்." என்று  "தமிழை யார் வளர்ப்பது???" என்ற தலையங்கத்தில் சொன்னதை நினைவுகூர்கிறேன். அதே அடிப்படை தான் இங்கும். நாட்டை யார் காப்பது? என்று எந்த நியதியும் இல்லை. நாட்டுப்பற்று இவருக்கு மட்டும்தான் வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை! இவர் தான் அல்லது இவர்கள் குடும்பம்தான் நாட்டையும்/நாட்டுப்பற்றையும் காக்கவேண்டும் என்றும் எந்த நியதியும் இல்லை. அது, குறிப்பிட்ட ஒருசிலரின் கடமையல்ல; 

நம் ஒவ்வொருவரின் கடமை! 
முடிந்தால், நாமும் நம்மால் இயன்றதை செய்வோம்!!
இல்லையேல்... தேவையற்று நம் நாட்டை; நாமே களங்கப்படுத்தாமல் இருப்போம்!!!