திங்கள், அக்டோபர் 05, 2015

புலி (2015)


என்னுடைய பார்வையில் - புலி திரைப்படம்!


இந்த புலி...
  • "பாகுபலி"யைப் பார்த்து; தனக்குத்தானே சூடுபோட்டுக்கொண்ட "பரிதாபப்" - புலி!
  • கருஞ்சிறுத்தையை கண்ணா-பின்னாவென்று அடிக்கறதா; பீத்திக்கும் "காமடிப்" - புலி!
  • வீணாய்ப் போய்விட்ட, வடிவேலுவின் "எலி"யிடமே; தோற்றுப்போன "பொம்மைப்" - புலி!
  • (ரிலீசுக்கு முன்) தான் நடிச்ச படத்தை; தானே சரியாய் பார்க்கதெரியாத "குருட்டுப்" - புலி!
  • இஷ்ட்டப்பட்டு தியேட்டருக்கு வர்றவங்களை; கஷ்ட்டப்படுத்தும் "குஷ்ட்டப்" - புலி!
  • நம்பி தியேட்டருக்கு வந்தவங்களை; "செய்/செய்னு-செஞ்சு" அனுப்பும் "அட்டுப்" - புலி!
  • கோழை-வில்லனிடம் "நீ இங்க மட்டும்தான் தளபதி!ன்னு"; வீரம்பேசும் "அசட்டுப்" - புலி! 
  • "புலி" என்ற சொல்லுக்குண்டான வீரத்தையே களங்கப்படுத்திய "கோழைப்" - புலி!
  • நம் தேசிய-விலங்கையே மாசுப்படுத்திய; தேசத் "துரோகிப்" - புலி!
  • "வரி"ப்புலி போன்ற வேஷத்தைப் போட்டு; ஊரை ஏமாற்றப் பார்த்த "சொறிப்" - புலி!
*********
  • இந்தப் புலியின் அசிங்கத்தை மென்மேலும் எடுத்துச்சொல்ல; எனக்கேதும் இல்லை  - கிலி!
  • நிறையச் சொல்லி, என் தரத்தை குறைத்துக் கொள்வதால்; எனக்கு வேண்டாம் - வலி!!   

எனக்கென்னவோ, விஜய் என்கிற நடிகரின் மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருப்பதாய் எவரும் தவறாக எண்ணிவிடாதீர்கள்!  தலைவா படத்தைப் பார்த்துவிட்டு; என் பாராட்டான பார்வையை முக-நூலில் எழுதி இருக்கிறேன். இதே வலைப்பதிவில், கத்தி திரைப்படத்திற்கும் நேர்மையான-விமர்சனம் எழுதி இருக்கிறேன்.

இதுபோன்று, நையாண்டித்தனமாய் நான் விமர்சனங்களை எழுதுவதில்லை! ஒரு திரைப்படம் எடுப்பதில் இருக்கும் சிரமங்களை, நான் நன்கறிவேன்! ஆனால், இதுபோன்ற தவறான படங்களை எடுத்துரைத்து; இம்மாதிராயன படங்கள் வெளிவருவதையே தடுக்கவேண்டும்! என்பதே என் எண்ணம். இதுபோன்றொரு, கேவலமான திரைப்படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை! இந்தப்படம் என்னளவில்...

விஜய்யின் திரைப்படங்களில் மிக-மோசமான படம்! இப்படிப்பட்ட படங்கள்; 
தமிழ்-திரைத்துறைக்கு "மாபெரும்"சாபக்கேடு!!

4 கருத்துகள்: