புதன், பிப்ரவரி 07, 2018

குறள் எண்: 0920 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 092 -  வரைவின் மகளிர்; குறள் எண்: 0920}

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

விழியப்பன் விளக்கம்: எவருடனும் உறவாடும் இருமனம் கொண்ட விலைமகளிர், கள் மற்றும் சூது - இவை மூன்றும், திருமகளால் கைவிடப் பட்டவருக்குத் தொடர்புடையவை ஆகும்!
(அது போல்...)
எவரையும் எதிர்க்கும் மூர்க்கம் நிறைந்த அடியாட்கள், பொய் மற்றும் ஊழல் - இவை மூன்றும், மக்களால் நிராகரிக்கப் பட்டவருக்குத் தேவையானவை ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக