செவ்வாய், பிப்ரவரி 27, 2018

குறள் எண்: 0940 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 094 - சூது; குறள் எண்: 0940}

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்

விழியப்பன் விளக்கம்: பொருளை இழக்கும் போதெல்லாம், சூதின் மேல் காதல் பெருகுவது போல்; துன்பம் நேரும் போதெல்லாம், உயிரும் காதலிக்கப்பட வேண்டியதாகும்!
(அது போல்...)
தோல்வியைத் தழுவும் போதெல்லாம், உழைப்பின் மேல் நம்பிக்கை உயர்வது போல்; பிரிவு நிகழும் போதெல்லாம், உறவுகளும் நம்பப்பப்பட வேண்டியவராவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக