வியாழன், மார்ச் 02, 2017

குறள் எண்: 0578 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0578}

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு

விழியப்பன் விளக்கம்: கடமையின் குறிக்கோளைச் சிதைக்காமல், மனிதத்தை வெளிப்படுத்தும் திறமை உடையோர்க்கு; இவ்வுலகமே, உரிமை உடையதாக மாறும்.
(அது போல்...)
குடும்பத்தின் அடிப்படையை அழிக்காமல், உரிமையைப் பரிமாறும் வைராக்கியம் உடையோர்க்கு; இச்சமூகமே, பெருமை சேர்ப்பதாக அமையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக