திங்கள், மார்ச் 27, 2017

குறள் எண்: 0603 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0603}

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

விழியப்பன் விளக்கம்: சோம்பலைத் தன்னுடன் இணைத்து வாழும், அறியாமை கொண்டோர் பிறந்த குடும்பம்; அவரையும் முந்திக்கொண்டு அழிந்துவிடும்.
(அது போல்...)
ஊழலைத் தம்முள்ளே புதைத்து வலம்வரும், தீயொழுக்கம் உடையோரைக் கொண்ட கட்சி; அவர்களுக்கு முன்பாகவே சிதைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக