புதன், மார்ச் 01, 2017

குறள் எண்: 0577 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0577}

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்

விழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணை இல்லாதோர், கண்ணிருந்தும் கண் அற்றவர் ஆவர்! கண்களை உடையோர், கருணையின்றி இருப்பதும் சாத்தியமில்லை!
(அது போல்...)
மழலையெனும் மகிமை உணராதோர், குழந்தையிருந்தும் குழந்தை அற்றவர் ஆவர்! குழந்தைகள் உடையோர், மழலையறியாது இருத்தலும் அரிதானது!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக