சனி, மார்ச் 04, 2017

குறள் எண்: 0580 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0580}

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: போற்றத்தக்க, கண்ணோட்டம் எனும் நாகரிகம் வேண்டுவோர்; தரப்படும் உணவில் நஞ்சு இடப்படுவதை அறிந்தும், அதை உண்டு உறவைத் தொடர்வர்!
(அது போல்...)
மதிக்கத்தக்க, நட்பெனும் ஊக்கத்தை விரும்புவோர்; சொல்லும் சொல்லில் வஞ்சகம் இருப்பதை உணர்ந்தும், அதைக் கேட்டு நட்பைத் தொடர்வர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக