புதன், மார்ச் 15, 2017

குறள் எண்: 0591 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0591}

உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று

விழியப்பன் விளக்கம்: ஊக்கமெனும் ஒழுக்கம் உடையவரே, உடையவர் ஆவர்; ஒழுக்கத்தைத் தவிர்த்து, மற்றவைகளைக் கொண்டிருப்போர் - உடையவர் ஆவரோ?
(அது போல்...)
மனிதமெனும் அடிப்படை அறிந்தோரே, சான்றோர் ஆவர்; மனிதத்தை நீக்கி, பிறவற்றை அறிந்தோர் - மனிதர் ஆவரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக