ஞாயிறு, மார்ச் 19, 2017

குறள் எண்: 0595 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0595}

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

விழியப்பன் விளக்கம்: நீரின் ஓட்டத்திற்கு ஒப்ப, பூக்கள் வளர்ச்சி அடைவதுபோல்; மக்களின் ஊக்கத்திற்கு ஒப்ப, புகழ்/பொருள் போன்றவை வளர்ச்சி அடையும்.
(அது போல்...)
சிந்தனையின் தெளிவிற்கு இணையாக, செயல்கள் அறத்தைத் தழுவுவதுபோல்; குடும்பத்தின் ஒழுக்கத்திற்கு இணையாக, மனிதம்/நேர்மை போன்ற அறங்கள் பெருகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக