வெள்ளி, மார்ச் 17, 2017

குறள் எண்: 0593 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 060 - ஊக்கமுடைமை; குறள் எண்: 0593}

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்

விழியப்பன் விளக்கம்: ஊக்கத்தை, வைராக்கியமுடன் கடைப்பிடிக்கும் முனைப்புடையோர்;  "சம்பாதித்ததை இழந்தோம்" என்றெண்ணி தளர்வடைய மாட்டார்கள்.
(அது போல்...)
குடும்பத்திற்காக, உறுதியுடன் உழைக்கும் இயல்புடையோர்; "சந்தோசத்தை இழந்தோம்" என்றெண்ணி துன்பமடைய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக