வெள்ளி, மார்ச் 03, 2017

குறள் எண்: 0579 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0579}

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

விழியப்பன் விளக்கம்: எல்லோரையும் தண்டிக்கும் குணம் உடையவரையும் பொறுத்து; அவர்களை மனிதமுடன் அணுகும் பண்பே உயர்வானது.
(அது போல்...)
அனைத்தையும் விமர்சிக்கும் தன்மை உடையவரையும் மதித்து; கண்ணியமுடன் பதிலளிக்கும் பழக்கமே சிறந்தது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக