ஞாயிறு, மார்ச் 05, 2017

குறள் எண்: 0581 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 059 - ஒற்றாடல்; குறள் எண்: 0581}

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றுஎன்க மன்னவன் கண்

விழியப்பன் விளக்கம்: உளவுத்துறை மூலம் செய்திகளைச் சேகரிப்பது/புகழ் நிரம்பிய அறநூல்களை நிறுவுவது - இவ்விரு செயல்களும், அரசாள்பவரின் இரு கண்களென உணரவேண்டும்.
(அது போல்...)
உண்மை பேசி உறவுகளைப் பேணுவது/நேர்மை மிகுந்த பிள்ளைகளை வளர்ப்பது - இவ்விரு விடயங்களும், இல்லறத்தின் இரு கரங்களென எண்ணவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக