சனி, ஆகஸ்ட் 26, 2017

“தென்னாட்டின் நான்காம் கடலா?!”


   “பைரவா” திரைப்படத்தின் “நில்லாயோ“ எனத் துவங்கும் பாடலில், திரு. வைரமுத்து அருமையான கற்பனையில், உவமையொன்றைச் சேர்த்திருப்பார். அது - “இவள், தென்னாட்டின் நான்காம் கடலா?!” என கேள்வியாய் வைக்கும் வரியே. மிக அற்புதமான கற்பனை! இம்மாதிரியான உவமைகளில், கவிப்பேரரசுக்கென்று ஓர் தனியிடம் எப்போதுமுண்டு. இவ்வுவமையைச் சிலாகிக்கும் அதே நேரத்தில், ஓர் ஐயமும் எழுகிறது. மாற்றுக் கருத்தேதும் இன்றி, கவிப்பேரரசு “நம் தமிழகத்தை”த் தான் “தென்னாடு” என்கிறார்; அதிலும் முக்கடலை இணைக்கும் முனையை மையப்படுத்தி சொல்கிறார்! அம்முனையின், நான்காம் கடலா, அப்பெண்மகள்? என்றே வியந்து வர்ணிக்கிறார்! என் சந்தேகம் பின்வருவதே: முக்கடல் “மட்டும்” சேர்வதால் தான், அது தென்முனை ஆகிறது; நான்காம் கடல் இணைந்தால் “அதுவோர் தீபகற்பம்” ஆகி, நாற்புறமும் ஒரே கடலால் சூழ்ந்ததாய் ஆகிவிடும். பின்னெப்படி… அதில் “நான்காம் கடல்” இருக்கமுடியும்?

ஏனோ… இவ்வுவமையில் பிழையிருப்பதாய் உணர்கிறேன்! 

- விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு
26082017
www.vizhiyappan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக