செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

குறள் எண்: 0751 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0751}

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்

விழியப்பன் விளக்கம்: பொருளற்ற வாழ்க்கை வாழ்வோர்க்கு, மதிப்பை அளிப்பது;  செல்வம் எனும் பொருளைத் தவிர்த்து, வேறெந்தப் பொருளும் இல்லை.
(அது போல்...)
செயலற்ற வாழ்க்கை வாழ்வோரை, செயல்பட வைப்பது; சிந்தனை எனும் செயலைத் தவிர்த்து, வேறெந்தச் செயலும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக