திங்கள், ஆகஸ்ட் 28, 2017

குறள் எண்: 0757 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0757}

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

விழியப்பன் விளக்கம்: அன்பிலிருந்து பிறக்கும், அருள் எனும் குழந்தை; பொருள் எனும், செல்வமிக்க செவிலித் தாயால் வளர்க்கப்படும்!
(அது போல்...)
வாக்காளரிலிருந்து பிறக்கும், வாக்கு எனும் விதை; செங்கோல் எனும், சக்திவாய்ந்த நேர்மையான ஆட்சியரால் உயிர்ப்பிக்கப்படும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக