ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

குறள் எண்: 0756 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை; குறள் எண்: 0756}

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

விழியப்பன் விளக்கம்: உரிமை கோராத பொதுச் சொத்து/வரி போன்ற வருவாய்/பகைவர்களை அழித்தோ அல்லது அடக்கியோ கிடைப்பவை - இவையாவும், பொது மக்களுக்குப் பயனளிக்க வேண்டிய; அரசரின் உடைமைகள் ஆகும்.
(அது போல்...)
பெற்றோர் சம்பாதிக்காத முன்னோர் சொத்து/வட்டி போன்ற வருமானம்/நற்பேறு மூலமோ அல்லது இலவசமாகவோ கிடைப்பவை - இவையாவும், உதவியற்ற மக்களுக்குப் பகிரப்பட வேண்டிய; பொது உடைமைகள் ஆகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக