வெள்ளி, டிசம்பர் 16, 2016

நம்மைப் பெற்றவளும்; நம்-பிள்ளைகளைப் பெற்றவளும்...


என்னைப் பெற்றவளும்
என்மகளைப் பெற்றவளும்
வெவ்வேறென முடியுமோ?
அவ்வாதம் முறையோ?

என்னுயிரும் என்மகளின்
இன்னுயிரும் ஒன்றெனில்;
என்னையும் அவளையும்
ஈன்றோரும் ஒன்றன்றோ?

உயிராலும் உடலாலும்
உறவாலும் பிரிந்திடினும்
உணர்வாலும் உரிமையாலும்
இணையானோர் இருவருமே!

நம்மைப் பெற்றவளோ
நம்-பிள்ளைகளைப் பெற்றவளோ
அம்மாவெனில் அம்மாவே
எம்மாதாவும் நம்மாதாவே!

பெற்றவள் இருபாலரும்
ஒற்றவள் என்றென்போம்!
இருவரையும் எந்நாளும்
கருத்துடனே காத்திடுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக