வியாழன், டிசம்பர் 29, 2016

குறள் எண்: 0515 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0515}

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து, நிறைவேற்றும் திறனுடையோரைத் தவிர்த்து; சார்ந்திருக்கும் ஒருவரைச் சிறந்தவரென, வினைகளைச் செய்ய நியமித்தல் முறையன்று.
(அது போல்...)
தவறுகளை நடுநிலையோடு, தண்டிக்கும் இயல்புடையோரை விடுத்து; வேண்டியவர் ஒருவரை நியாயவாதியென, நீதியை வழங்க பதவியளித்தல் சரியல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக