சனி, டிசம்பர் 31, 2016

குறள் எண்: 0517 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0517}

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

விழியப்பன் விளக்கம்: குறிப்பிட்ட வினையை, குறிப்பிட்ட இயல்பால் - குறிப்பிட்ட நபர், செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து; அந்த வினையை, அவர்வசம் ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
தகுதியான உறவை, தகுதியான திறனால் - தகுதியான சுற்றத்தார், வழிநடத்திச் செல்வர் என்பதை உணர்ந்து; அந்த உறவை, அவர்களுடன் இணைத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக