திங்கள், மே 01, 2017

குறள் எண்: 0638 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 064 - அமைச்சு; குறள் எண்: 0638}


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், அமைச்சர்கள் அறிந்தவைகளை அறியமாட்டார்கள் எனினும்; அவைகளை உறுதியாய் எடுத்துரைப்பது, அருகிலிருக்கும் அமைச்சரின் கடமையாகும்.
(அது போல்...)
முதியவர்கள், இளைஞர்களின் வேகத்தோடு வரமாட்டார்கள் எனினும்; தொழில்நுட்பங்களை பொறுமையாய் கற்பிப்பது, உறவிலிருக்கும் இளைஞர்களின் கடமையாகும்.

2 கருத்துகள்:

 1. அருமையான பார்வை.
  தற்போது உள்ள நடைமுறை சார்ந்த குறள் விளக்கம்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோகுல், எல்லாம் நம் பெருந்தகையின் அருள். 😊🙏

   நீக்கு