வெள்ளி, மே 12, 2017

குறள் எண்: 0649 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 065 - சொல்வன்மை; குறள் எண்: 0649}

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

விழியப்பன் விளக்கம்: சொல்ல வேண்டியதை, பொருத்தமான சில சொற்களால்; தெளிவாகவும்/பிழையில்லாமலும் சொல்லும் திறனில்லாதோர், பல சொற்களால் விளக்க விரும்புவர்.
(அது போல்...)
செய்ய வேண்டியதை, தகுதியான சில ஊழியர்களுடன்; நேர்த்தியாகவும்/ஊழலில்லாமலும் செய்யும் வலிமையில்லாதோர், அதிக ஊழியர்களுடன் செய்ய முனைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக