வியாழன், மே 25, 2017

குறள் எண்: 0662 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0662}

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

விழியப்பன் விளக்கம்: வினைகளைத் தடையில்லாமல் செய்வது மற்றும் தடைபட்டாலும் மனம் தளராதது - இவ்விரண்டின் வழி நடப்பதே, பகுத்தறிந்தோரின் கோட்பாடு என்பர்.
(அது போல்...)
உறவுகளைப் பிரியாமல் தொடர்வது மற்றும் பிரிந்தாலும் பகையுணர்வு கொள்ளாதது - இவ்விரண்டு உறுதிகளைக் கடைப்பிடிப்பதே, சமுதாயத்தின் அடிப்படை என்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக