செவ்வாய், மே 23, 2017

குறள் எண்: 0660 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0660}

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று

விழியப்பன் விளக்கம்: வஞ்சம் நிறைந்த தீவினைகளால், பொருட்களைச் சேர்த்துப் பாதுகாப்பது; ஈரமண்ணால் செய்த பாத்திரத்தில், நீரை நிரப்பி சேமிக்க எண்ணுவதைப் போன்றதாகும்.
(அது போல்...)
குழப்பம் நிறைந்த மனதில், சிந்தனைகளைக் கோர்க்கத் திட்டமிடுவது; கற்பனையால் வரைந்த ஓவியத்தில், ஆன்மாவைப் புகுத்தி உயிர்ப்பிக்க நினைப்பதைப் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக