ஞாயிறு, மே 14, 2017

குறள் எண்: 0651 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0651}

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்

விழியப்பன் விளக்கம்: உடனிருப்போரின் தூய்மையான துணை, செல்வத்தை அளிப்பது போல்; அமைச்சர்களின் தூய்மையான வினைகள், வேண்டியவை அனைத்தையும் அளிக்கும்.
(அது போல்...)
அன்பிருப்போரின் வலிமையான வாழ்த்து, வாழ்வை வலுப்படுத்துவது போல்; குடும்பத்தினரின் வலிமையான உறவுகள், நற்சிந்தனைகள் அனைத்தையும் வளர்க்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக