வியாழன், மே 18, 2017

குறள் எண்: 0655 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 066 - வினைத்தூய்மை; குறள் எண்: 0655}

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று

விழியப்பன் விளக்கம்: “அய்யகோ… இப்படி செய்துவிட்டோமே!” என்று கவலையடையச் செய்யும் செயல்களைச் செய்யக்கூடாது; அப்படி செய்ய நேர்ந்தாலும், மீண்டும் அப்படியோர் செயலைச் செய்யாதது நன்று.
(அது போல்...)
“அடடே… தேவையின்றி பிரிந்துவிட்டோமே!” என்று ஏக்கமடைய வைக்கும் உறவுகளைப் பிரியக்கூடாது; அப்படி பிரிய நேர்ந்தாலும், மீண்டும் அப்படியோர் உறவைப் பிரியாதது சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக