புதன், செப்டம்பர் 02, 2015

குறள் எண்: 0031 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0031}சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: புகழ் அளிப்பதுடன் பொருளும் அளித்து, நம்மை மென்மேலும் உயர்த்துவதில்; அறத்தை விட, சிறந்தது வேறெதுவும் உண்டோ?

(அது போல்...)

உயிர் கொடுப்பதுடன் தாய்ப்பாலும் கொடுத்து, நம்மை தொடர்ந்து உயிர்ப்பிப்பதில்; தாயை விட, உன்னத-உறவு வேறொன்று இருக்கிறதா?

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக