புதன், செப்டம்பர் 09, 2015

குறள் எண்: 0038 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0038}வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்

விழியப்பன் விளக்கம்: வீணான நாளொன்றே இல்லாமல் நல்லது செய்தால்; அதுவே, ஒருவனின் மறுபிறப்பின் பாதையை அடைக்கும் கல்லாகும்.

(அது போல்...)

ஒருநாளும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால்; அதுவே, ஒருவரை முதுமை-நோய்களில் இருந்து காக்கும் மருந்தாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக