ஞாயிறு, செப்டம்பர் 06, 2015

குறள் எண்: 0035 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0035}அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்

விழியப்பன் விளக்கம்: பொறாமை, பேராசை, கோபம், தீய-வார்த்தைகள் - இவை நான்கையும்; கடினப்பட்டு விலக்கிவைப்பதே அறமாகும்.

(அது போல்...)

மண், பொன், மது, மாது - இந்நான்கு ஆசைகளையும்; சிரமப்பட்டு விலக்கிவைப்பதே, மனிதத்தை நிலைநிறுத்தும் வழியாகும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக