புதன், செப்டம்பர் 02, 2015

திரும"ண"மா? திரும"ன"மா??


திருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள்
{இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்}


         இன்று என் இளைய சித்தப்பா-சின்னம்மா அவர்களின் திருமன-நாள் என்பதை; எங்கள் வம்சத்து (TPL மணியக்காரர் வம்சம்) வாட்ஸ்-ஆப் குழுவில் அறிந்தேன். உடன், அவர்களுக்கு அங்கே வாழ்த்தை தெரிவித்தேன்.  வழக்கம் போல், எங்கள் குழுவின் தலைப்பு அவர்களுக்காய் தற்காலிகமாக மாற்றப்பட்டது. ஆனால், அது ஆங்கிலத்தில் இருந்ததால்; நான் "இளைய மகன்-மருமகள் திருமன நாள்" என்று மாற்றினேன். என் தம்பி (பெரிய சித்தப்பா மகன்) ஒருவன், அண்ணா! தலைப்பில் "ண" வரவேண்டும் அண்ணா! என்றான். நான் இல்லையடா! "ன" தான் வரவேண்டும்; திரும"ன"த்தில், இரண்டு மனங்கள் இணைவதால் அதை திரும"ன"ம் என்பதே சரி என்றேன். இருப்பினும் இணையத்தில் துழாவினேன்; இரண்டு விதத்திலும் இந்த நிகழ்வை எழுதும் வழக்கம் இருப்பதைப் பார்த்தேன். உடனே, என்னுள் ஒரு விளக்கம் பிறந்தது. இதனிடையே இன்னுமோர் தம்பியும் (மன-நாள் கொண்டாடுவோரின் மகன்) - இரண்டும் சரி அண்ணா! என்றான்.

      என்னுள் எழுந்த புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. என்னளவில், திரும"ன"ம் என்று சொல்வதே சரியாகவும்/பொருத்தமாகவும் இருப்பதாய் பார்க்கிறேன்; இரண்டு வேறுபட்ட மனங்கள் ஒன்றாய் இணையும் நிகழ்வாதலால் - திரும"ன"ம் என்பதே சரியென்று எண்ணினேன். ஆனாலும், இல்லை! திரும"ண"ம் என்று சொன்னாலும்; மணம் (அதாவது) நறுமணம் என்று பொருள் கூட வருகிறதே?! இந்த நிகழ்வின் நடைபெறும் இடத்தில், பல்வேறு வகையான வாசனை கொண்ட பூக்கள் முதல்; சந்தனம், பன்னீர் என்று பலவிதமான நறுமணப் பொருட்களும் சங்கமித்து இருப்பது நம் அனைவர்க்கும் தெரிந்ததே. எனவே, இந்த பொருட்கள் எல்லாம் நிகழ்ச்சி நடைபெறும் அந்த இடத்தையே "மணம் மிக்கதாய்" மாற்றி அமைப்பதால்; அந்த நிகழ்வை திரும"ண"ம் என்று சொல்வது கூட பொருத்தமாய்த்தான் இருப்பதாய் தோன்றியது. இரண்டுமே சரியென்ற போதிலும்; என்னளவில், இந்நிகழ்வை இரண்டு மனங்கள்...

இணையும் நிகழ்வு என்ற பொருளில்; திரும"ன"ம் என்றே வரையறுக்க விரும்புகிறேன்!!!

4 கருத்துகள்:

 1. நன்றி ஜனா. இதில் சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கக்கூடும்.

  ஆனால், அதுதான் நம் தமிழின் சிறப்பு. பல மொழிகளிலும், இம்மாதிரி ஓரெழுத்து/ஈரெழுத்து மாறுபடுவதால் உருவாகும் வித்தியாச-விளக்கங்கள் இயல்பான-சிறப்பு தான் எனினும்...

  தமிழில் அப்படிப்பட்ட மாற்றம் இப்படியொரு அதிசய/ஒற்றுமையுள்ள புரிதலைக் கொடுப்பது நம் மொழியின் தனிச்சிறப்பு எனபதை மறுக்கமுடியாது.

  இதில் எதில் சரி? எது தவறு? என்ற வாதத்திற்க்கே இடமில்லை. ஏனெனில், இந்த வார்த்தை யாரால் எப்படி உருவானது என்பதற்கு சரியான சான்று கிடைப்பது பெருத்த சிரமம். விளக்கங்கள் ஏற்புடையதாய் இருப்பதால்; இரண்டுமே சரியென்று பார்ப்பதே சரி.

  இரண்டுமே சரியெனினும்...

  என்னுடைய பார்வையில் திரும"ன"ம் என்பது மிகப்பொருத்தமாய் இருக்கிறது!

  சிலருக்கு திரும"ண"ம் என்பது மிகப்பொருத்தமாய் இருக்கக்கூடும்!!

  இரண்டிலும், எந்த தவறும் இல்லை. :)

  பதிலளிநீக்கு
 2. இரண்டுமே சரியெனினும்...இதில் எதில் சரி? எது தவறு? என்ற வாதத்திற்க்கே இடமில்லைஇரண்டிலும், எந்த தவறும் இல்லை. :) அருமை...

  பதிலளிநீக்கு