வியாழன், செப்டம்பர் 03, 2015

குறள் எண்: 0032 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0032}


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு

விழியப்பன் விளக்கம்: அறத்தைப்போல் நமக்கு நன்மையப்பதும் எதுவுமில்லை; அறத்தை மறப்பதால் விளையும் அழிவைவிட, வீரியமானதும் எதுவுமில்லை.

(அது போல்...)

நல்நட்பைப்போல் நம்மை ஊக்குவிப்பதும் ஏதுமில்லை; அந்நட்பை இழப்பதால் விளையும் ஊக்க-குறைவைவிட, பாதிப்பும் ஏதுமில்லை.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

4 கருத்துகள்:

 1. ஒழுக்கமும் உயிரினும் ஓம்பப்படும்..என்பதால்
  உயரிய வழுவாத ஒழுக்கமும் நம்மை உயர்த்தும் இல்லையா..ஒழுக்கமும் உதாரணபடுத்தலாமா...நட்பே...
  உன் கருத்து அருமை...

  பதிலளிநீக்கு
 2. என்ன ஒரு ஒற்றுமை ஜனா!

  நானும் முதலில் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தான் எழுத எத்தனித்தேன். ஆனால், அறம் என்பதில் எல்லா தர்மங்களும் (ஒழுக்கம் உட்பட) அடங்கும் என்பதால்; வேறொன்றை சொல்ல விரும்பினேன்.

  ஆனால், நட்பு என்பதிலும் - அறம் இருப்பதை மறுப்பதற்கில்லை!

  எனினும், நட்பை அடிப்படையாகக் கொண்டு நிகர்-விளக்கத்தை சொல்லுதல் பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது.

  இந்த அதிகாரத்தின் தலைப்பே சொல்கிறது அறம் எத்தனை பெரிய ஒழுக்கம்/செயல் என்று! இதில் உள்ள 10 குறள்களும் எத்தனை முக்கியத்துவம் என்று. முதல் 3 அதிகாரங்களிலும் கடவுள்/மழை/நீத்தார் பெருமை என்று அறம் சார்ந்த செய்திகளையே சொல்லி இருப்பினும்...

  "அறன் வலியுறுத்தல்" என்று இந்த அதிகாரத்தையே வகுத்து இருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட, இந்த முதற்பால் முழுவதுமே கூட...

  அறமே! அறம் தவிர்த்து வேறேதும் இல்லை.

  எனவே, எதைப் பற்றி குறிப்பிட்டாலும் - அது அறத்தின் கீழ்தான் வரவேண்டும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறத்தில் ஒழுக்கம் அடங்கும்...என்பது சிறப்பு..
   அருமையான விளக்கம் ..
   நன்றி "நல்ல நட்பே"

   நீக்கு
  2. உன் சரியான புரிதலுக்கு தலை வணங்குகிறேன் சிறந்த-நட்பே.

   நீக்கு