செவ்வாய், செப்டம்பர் 01, 2015

குறள் எண்: 0030 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 003 - நீத்தார் பெருமை; குறள் எண்: 0030}
                           

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

விழியப்பன் விளக்கம்: மற்ற எல்லா உயிர்களிடத்தும், தாய்மை-கலந்த அன்பைக் கடைப்பிடித்து; அறவழியில் நடப்போரே, அந்தணர் ஆவர்.

(அது போல்...)

தன்னைச் சாராத மக்களிடமும், விதியை-மீறாத நேர்மையைக் கடைப்பிடித்து; சமத்துவத்தைக் காப்பவரே, சிறந்த தலைவராவர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக