வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மெளனம் என்பது என்ன???



        "மெளனம் - இயலாமையா? ஆளுமையா??" என்ற தலையங்கத்தில் மெளனத்தை எப்படி வகைப் பிரிக்கலாம் என்று; என் பார்வையில் விளக்கி இருந்தேன். அதற்கு கீழ்க்காணும் இரண்டு கருத்துமிக்க பின்னூட்டங்கள் வந்தன. 1. என்தம்பி-ஒருவன் சொன்னது: மௌனம் ஆளுமையா என்று தெரியவில்லை; ஆனால், நிச்சயம் அதை இயலாமையாக கருதவில்லை. 2. (நான்)முகமறியா நட்பு சொன்னது: வாய் திறவாமல் இருப்பது மெளனம் அல்ல, மனம் திறவாமல் இருப்பதே மெளனம். என் தம்பிக்கு "மெளனம் - ஆளுமை என்பது உனக்கு புரியும் காலம் வரும்; அதுவரை, மெளனித்து காத்திருக்கிறேன்" என்று பதில் கூறி இருந்தேன். "இயலாமை" அல்லது "ஆளுமை" என்ற வார்த்தைகள் - மெளனத்தை வகைபிரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டவை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அதாவது எந்த சூழலால்(இயலாமையால்) மெளனம் நிகழ்கிறது?; ஒருவர் மெளனத்தை எப்படி கையால்கிறார்(ஆளுமை-செய்கிறார்)?? என்பதை உணர்த்தும்...

            என்பதை விளக்க, வகைப்பிர்க்கப்பட்டவை. மேலும், அவை ஒவ்வொன்றின் அடிப்படையும்/புரிதலும்/விளையும்-நன்மையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை - என்பதை உணர்த்தும் வண்ணம் வரையறுக்கப்பட்டவை. எனவே "இயலாமை" மற்றும் "ஆளுமை" என்ற இரண்டு தனிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு - வகைப்பிரித்தலைக் குழப்பிக்கொள்ளவேண்டாம் என்று "அமைதியாய்" கேட்டுக்கொள்கிறேன். இப்போது, 2-ஆவது பின்னூடத்தைப் பார்ப்போம்: வார்த்தைகளற்று இருப்பது மெளனம் அல்ல! என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தும் இல்லை. நான் அப்படிப்பட்ட மெளனங்களை வரையறுக்கவில்லை. அதுபோல் "மனம் திறவாமல் இருக்கும் மெளனத்தில்" இரண்டு உட்பிரிவுகளைப் பார்க்கிறேன். ஒன்று: வார்த்தைகளற்று, மனதால்  "எந்த ஆரவாரமும்" இல்லாமல், மெளனத்தின் விளைவுகளை ஆராய்வது. மனம் மெளனமாய்/இயல்பாய் இருக்கும் - ஆனால், ஏதுமற்று இருக்காது. ஆனால், எதிர்பார்ப்பின் பலன் குறித்து ஆராயும். 

          இரண்டாவது: மனதை முழுமையாய் அடக்கி; எதைப்பற்றியும் யோசிக்காமல் மெளனமாய்/அமைதியாய் இருப்பது. என்னளவில், இந்த உட்பிரிவில் உடன்பாடில்லை. எனக்கென்று குடும்பம் இருக்கிறது; "காமம்" துவங்கி முழுமையாகாத, பல ஆசைகள் உள்ளன! முழுமை ஆனாலும், குடும்பத்தைத் தாண்டி, அனைத்தையும் மனதால் "முழுமையாய் மெளனித்துப்" பார்த்தல் இயலாது! அப்படி பார்ப்பது "அறனே இல்லை!" என்பதால், அதை ஆலோசனைக் கூட செய்வதில்லை. என் குடும்பம், சிறு ஆட்டம் கண்டாலும்; என் மெளனம் சிதைந்து - என்னையும் சிதைக்கும். இருப்பினும், தியானம் போன்ற குறுகியக்கால மெளனத்தில் எனக்கு உடன்பாடுண்டு. தொடர்ச்சியாய் இல்லையெனினும், தாங்கொண்ணா துயரம் வரும்போது நிச்சயம் தியானிப்பேன். அதுபோல், முதல் உட்பிரிவில் வரும் மன-மெளனத்தில் எனக்கு பெருத்த நம்பிக்கையும்/ஊடன்பாடும் உண்டு.  சரி, வார்த்தைகளால் "மட்டும்" மெளனத்தல் என்பது என்ன? என்றால், அப்படிப்பட்ட... 

          மெளனத்தால், (பெரும்பான்மையில்)மெளனம் கடைபிடிப்போருக்கு எந்த சிரமும் இல்லை. ஏனெனில், அதனால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை! இழப்பும் இல்லை!! அதை எதிர்கொள்பவருக்கு; "தற்காலிக"ஏமாற்றம் அல்லது வேறொரு எதிர்மறை-விளைவை உண்டாக்கக் கூகும். ஆனால், மெளனத்தின் அடிப்படை - மெளனிப்பவருக்கும் அதில் ஏதோவொரு சம்பந்தம் இருக்கவேண்டும் - என்பது என் பார்வை. அதற்கு சில உதாரணங்கள் கீழே:
  • விமானம் அல்லது வேறு பயணத்தில் - நான் அருகில் இருப்பவருடன் பேசுவதே இல்லை! அவர்களாய் ஏதும் கேட்டாலும், பதிலுக்கு "நீங்க எந்த ஊர்?" போன்ற மறு-கேள்வி கூட கேட்பதில்லை. அது எனக்கு தேவையற்றது; அதை நான் மெளனம் என்றே கருதுவதில்லை.
  • மனித வள (Human Resource) துறையில் இருப்போர்; நம் கேள்விகளில் எத்தனை நியாயமும்/எதிர்பார்ப்பும் இருப்பினும் - எந்த பதிலும் கொடுக்கமாட்டார்கள். ஆரம்பத்தில், அதில் எனக்கு பெருத்த ஆற்றாமையும்/மறுப்பும் உண்டெனினும் - பின்னர், அமைதியாய் யோசித்ததில்; அதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி என்பது புரிந்தது. எனவே, அவர்கள் பதிலற்று இருப்பதை(யும்); நான் மெளனம் என்று வரையறுக்கவில்லை.
  • எனக்கிருக்கும் புரிதலை விட, மெளனம் பற்றி, அதிகமான புரிதல் கொண்டோர் ஏராளாம்! ஆனால், அவர்களில் பலரும், இதுபோல் மற்றவருக்கும் புரிதலைக் கொண்டு சேர்ப்பதில்லை.  அவர்களின் அமைதியையும், மெளனம் என்ற எல்லைக்குள் வரையறுக்க விரும்பவில்லை.
  • "இவர் வந்தால் நன்றாக இருக்கும்! அவர் இருந்தால் நன்றாக இருக்கும்!!" என்று பல ஆலோசனைகளை "இலவசமாக" கொடுத்துவிட்டு; அரசியல் போன்ற விடயங்களில் "நாம் ஏன் அதை செய்யக்கூடாது?!" என்று - நம்மை நாமே கேட்காமல் அமைதியாய் இருப்பவர்கள் தான் - நம்மில் பலரும். இதை மெளனம் என்றால் ஏற்போமா?!
           என்னளவில், மெளனம் என்பது என்ன??? - என்பதில் பெரும் புரிதலுண்டு. அதை "இயன்ற அளவில்" விளக்கவும் முயற்சி செய்கிறேன். என்-உறவு என்பதால்(மட்டும்) "ஆளுமை" என்ற பிரிவில் என்னவள்/என்மகள் சார்ந்த உதாரங்களைக் கொடுக்கவில்லை. உங்களுக்கு சரியாய் புரியவில்லை எனில் - அது, புரியவைக்க முடியாத என் இயலாமையைக் காட்டுகிறது என்பதாய் நான் பார்க்கிறேன். மேலும் விரிவாய் நான் சொல்ல விரும்பவில்லை! என்பதும் அடக்கம். ஆனால், அந்த மெளனங்கள் என்னுள் ஏற்படுத்திய புரிதல்கள் ஏராளம் என்பதைத்தான் நான் அடிக்கோடிட விரும்புகிறேன்: மெளனிப்பவர்/மெளனத்தை-எதிர்கொள்பவர்/அல்லது இருவருக்கும் - இப்படி, எந்த விதத்திலும் பலன் அளிக்காத, எந்த செயலும் "மெளனம் அல்ல"!!! என்பது என் புரிதல். என் முந்தைய பதிவில் வரையறுக்கப்பட்ட அனைத்து மெளனங்களும்; அந்த அடிப்படை கொண்டவையே! மெளனத்தை எதிர்கொள்ளுதலும்/பின்பற்றுதலும் இருக்கட்டும்...

அதற்கு முன், மெளனம் என்றால் என்னவென்பதை உணர்வோம்!!!

2 கருத்துகள்:

  1. மெளனிப்பவர்/மெளனத்தை-எதிர்கொள்பவர்/அல்லது இருவருக்கும் - இப்படி, எந்த விதத்திலும் பலன் அளிக்காத, எந்த செயலும் "மெளனம் அல்ல"!!! என்பது என் புரிதல்.

    பதிலளிநீக்கு